ஓலக் குடிசையிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சிதம்பரநாதன்பிஜு நாராயணன் & பவதாரிணிஇளையராஜாதிருநெல்வேலி

Ola Kudisayile Song Lyrics in Tamil


—BGM—

பெண் : நானா நானனா நானாணன் நானா…
நானா நானனா நானாணன் நானனா நானாணன் நானா…

பெண் : ஓலக் குடிசையிலே நான் இருந்தாலும்…
வானத்ததான் எம் மனசு வட்டம் இடுது…

—BGM—

ஆண் : நான் வாழும் கூட்டுக்குள்ளே தனிச்சிருந்தாலும்…
விண்மீன்கள் கூட்டத்தோட மனசு சுத்துது…

ஆண் : இல்லை என்றால் துன்பம் இல்லை…
செல்வம் என்றால் இன்பம் இல்லை…
என்றும் உள்ள செல்வம் மனசுதானே…

ஆண் : ஓலக் குடிசையிலே நான் இருந்தாலும்…
வானத்ததான் எம் மனசு வட்டம் இடுது…

—BGM—

ஆண் : பூங்குருவி தாலாட்டும் புல்வெளி சிரிக்கும்…
பொன் வெயில் மஞ்சளை தூவிப் பார்க்குமே…
தேனருவி நீரோட்டம் மான் போல் குதிக்கும்…
நீரலை பாடிடும் ஜதிகள் கேட்குமே…

ஆண் : மழை மேகத்து முத்தம் பயிர்கள் ஆடும் ஆட்டம்…
காற்றின் கைகள் பட்டால் அங்கே ஆனந்தம்…
வானம்பாடிகள் கூட்டம் நடுவில் வண்ணத் தோட்டம்…
காணக் காண நெஞ்சில் என்றும் ஆனந்தம்…

ஆண் : சித்திரம் போல் மண்ணில் அழகு
எத்தனை எத்தனை மானே…
அத்தனையும் பார்த்தால் இங்கு வேறென்ன வேண்டும்…

ஆண் : ஓலக் குடிசையிலே நான் இருந்தாலும்…
வானத்ததான் எம் மனசு வட்டம் இடுது…

—BGM—

ஆண் : தங்க வீணை ஆனாலும் தானாய்ப் பாடாது…
மீட்டவும் கேட்கவும் ஒருவன் வேண்டுமே…
ராகம் நூறு இருந்தாலும் தானாய் கேட்காது…
ராகங்கள் தெரிந்தவன் ஒருவன் வேண்டுமே…

ஆண் : இசையாலே மயங்காத மனம்தான் உலகில் ஏது…
இருண்ட மனதின் உள்ளே இசையும் நுழையாது…
என் பாடல் செல்லாத இடம்தான் உலகில் ஏது…
அதை தொடர்ந்து நீயும் செல்ல முடியாது…

ஆண் : அந்தி வானில் தென்றல் போல திங்கள் போல ஆடு…
உள்ளம் சொல்லும் உண்மை கீதம் என்றென்றும் பாடு…

ஆண் : ஓலக் குடிசையிலே நான் இருந்தாலும்…
வானத்ததான் எம் மனசு வட்டம் இடுது…
நான் வாழும் கூட்டுக்குள்ளே தனிச்சிருந்தாலும்…
விண்மீன்கள் கூட்டத்தோட மனசு சுத்துது…

ஆண் : இல்லை என்றால் துன்பம் இல்லை…
செல்வம் என்றால் இன்பம் இல்லை…
என்றும் உள்ள செல்வம் மனசுதானே…

ஆண் : ஓலக் குடிசையிலே நான் இருந்தாலும்…
வானத்ததான் எம் மனசு வட்டம் இடுது…


Notes : Ola Kudisayile Song Lyrics in Tamil. This Song from Thirunelveli (2000). Song Lyrics penned by Chidambaranathan. ஓலக் குடிசையிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading