நீங்க நல்லாயிருக்கோனும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தரராஜன் & எஸ். ஜானகிஎம்.எஸ்.விஸ்வநாதன்இதயக்கனி

Neenga Nalla Irukonum Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : தென்னகமாம் இன்பத் திருநாட்டில் மேவியதோர்…
கன்னடத்துக் குடகுமலைக் கனிவயிற்றில் கருவாகி…
தலைக் காவிரி என்னும் தாதியிடம் உருவாகி…

பெண் : வண்ணம் பாடி ஒரு வளர்த்தென்றல் தாலாட்ட…
கண்ணம்பாடி அணை கடந்து நலம் பாடி…

ஆண் : ஏர்வீழ்ச்சி காணாமல் இருக்க சிவசமுத்திர நீர்வீழ்ச்சி…
எனும் பேரில் நீண்ட வரலாறாய்…

பெண் : வீடு தாண்டா கற்பு விளங்கும் தமிழ் மகள் போல்…
காடு தாண்டும் காவிரியாய் அடங்கி நடந்து…
அகண்ட காவேரியாய் பின் தவழ்ந்து…

ஆண் : கரிகாலன் பேர் வாழும் கல்லணையில் கொள்ளிடத்தில்…
காணும் இடமெல்லாம் தாவிப் பெருகி வந்து…
தஞ்சை வளநாட்டைத் தாயாகிக் காப்பவளாம்…
தனிக்கருணை காவிரிபோல்…

பெண் : செல்லும் இடமெல்லாம் சீர் பெருக்கித் பேர் நிறுத்தி…
கல்லும் கனியாகும் கருணையால் எல்லோர்க்கும்…

ஆண் : பிள்ளையென நாளும் பேசவந்த கண்மணியே…
வள்ளலே எங்கள் வாழ்வே இதயக்கனி…

ஆண் & பெண் : எங்கள் இதயக்கனி… இதயக்கனி…

பெண் : நீங்க நல்லாயிருக்கோனும் நாடு முன்னேற…
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற…

குழு : நீங்க நல்லாயிருக்கோனும் நாடு முன்னேற…
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற…

ஆண் : என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே…
நீங்க நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே…

ஆண் & பெண் : என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே…
நீங்க நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே…

குழு : நீங்க நல்லாயிருக்கோனும் நாடு முன்னேற…
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற…

—BGM—

ஆண் : உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்…
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்…
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்…
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்…

ஆண் : மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண…
என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள்…
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்…
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்…

ஆண் : நீங்க நல்லாயிருக்கோனும் நாடு முன்னேற…
இந்த நாடெங்கும் இல்லாமை இல்லையென்றாக…

—BGM—

பெண் : பாடுபட்டுச் சேர்த்த பொருளைக் கொடுக்கும் போதும் இன்பம்…
வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போதும் இன்பம்…
நாம் பாடுபட்டுச் சேர்த்த பொருளைக் கொடுக்கும் போதும் இன்பம்…
வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போதும் இன்பம்…

ஆண் : பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை…
சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை…
பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை…
சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை…
அமைதி என்றும் இல்லை…

குழு : நீங்க நல்லாயிருக்கோனும் நாடு முன்னேற…
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற…

—BGM—

ஆண் : காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது…
மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது…
காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது…
மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது…

ஆண் : பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதர் இதயமே…
பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதர் இதயமே…
உலகில் பிரிவு மாறி ஒருமை வந்தால்…
அமைதி நிலவுமே… அமைதி நிலவுமே…

குழு : நீங்க நல்லாயிருக்கோனும் நாடு முன்னேற…
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற…

—BGM—

ஆண் : நதியைப் போல நாமும் நடந்து பயன் தர வேண்டும்…
கடலைப் போலே விரிந்த இதயம் இருந்திட வேண்டும்…
வானம் போலப் பிறருக்காக அழுதிட வேண்டும்…
வாழும் வாழ்க்கை உலகில் என்றும் விளங்கிட வேண்டும்…
விளங்கிட வேண்டும்…

குழு : நீங்க நல்லாயிருக்கோனும் நாடு முன்னேற…
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற…
நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற…
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற…

—BGM—

Notes : Neenga Nalla Irukonum Song Lyrics in Tamil. This Song from Idhayakkani (1975). Song Lyrics penned by Pulamaipithan. நீங்க நல்லாயிருக்கோனும் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading