நீ பாக்காம போறியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & உமா ரமணன்சங்கர் கணேஷ்மனைவி ஒரு மந்திரி

Nee Parkama Poriye Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ பாக்காம போறியே இது நியாயமா…
உன் பாட்டாத்தான் பாடுறேன் நெடு நேரமா…
மாசம் தேதிதான் பாக்க வேணுமா நீ பேச…
மாலை நேரத்து ஈர காத்துல நான் கூச…

பெண் : நான் பாக்கம போவேனா ஒரு ஓரமா…
உன் பாட்டாத்தான் பாடுறேன் பல வாரமா…
பார்த்து பேசினால் வேர்த்து ஊத்துதே என் தேகம்…
கால சூரியன் போல காயுதே உன் தேகம்…

ஆண் : நீ பாக்காம போறியே இது நியாயமா…
பெண் : நான் பாக்கம போவேனா ஒரு ஓரமா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : மஞ்சள் பூசுற போதும் மச்சான் ஞாபகம் ஓடும்…
நினைக்குற போதே சிலிர்க்கிறதென்ன…

ஆண் : உச்சந்தலையில சூடு தானா ஏறுது பாரு…
உணர்ச்சியை நீதான் உசுப்புவது என்ன…

பெண் : உள்ளக் கதவுகள மெல்ல திறக்கிறியே…
ஆண் : வெள்ளம் வருகையிலே மடையை அடைக்குறியே…
பெண் : நாலு பேர்கள் பார்க்கும் போது மானம் போகுமே…

ஆண் : நீ பாக்காம போறியே இது நியாயமா…
உன் பாட்டாத்தான் பாடுறேன் நெடு நேரமா…

பெண் : பார்த்து பேசினால் வேர்த்து ஊத்துதே என் தேகம்…
கால சூரியன் போல காயுதே உன் தேகம்…

ஆண் : நீ பாக்காம போறியே இது நியாயமா…
பெண் : நான் பாக்கம போவேனா ஒரு ஓரமா…

BGM

பெண் : பந்த கால்கள போட்டு பன்னீர் பூக்களை சூட்டு…
உதட்டுல தேனு கொடுக்கிறேன் நானு…

ஆண் : ஒத்தி போடுவதேம்மா ஒட்டி பேசிட வாமா…
பசிக்குற நேரம் படைச்சிட வேணும்…

பெண் : ஆக்க பொறுத்திருந்தும் ஆறப் பொறுக்கலையே…
ஆண் : இன்னும் காத்திருக்க என்னால் ஆகலையே…
பெண் : கேணி நீரை ஆற்று வெள்ளம் கொண்டு போகுமா…

பெண் : நான் பாக்கம போவேனா ஒரு ஓரமா…
உன் பாட்டாத்தான் பாடுறேன் பல வாரமா…

ஆண் : மாசம் தேதி தான் பாக்க வேணுமா நீ பேச…
மாலை நேரத்து ஈர காத்துல நான் கூச…

ஆண் : நீ பாக்காம போறியே இது நியாயமா…
பெண் : நான் பாக்கம போவேனா ஒரு ஓரமா…


Notes : Nee Parkama Poriye Song Lyrics in Tamil. This Song from Manaivi Oru Mandiri (1988). Song Lyrics penned by Vaali. நீ பாக்காம போறியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading