நந்தவனமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & சுவர்ணலதாகவிஜாலி

Nandhavaname Nandhavaname Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நந்தவனமே நந்தவனமே…
சொந்தம் சொல்லி போகிறோம்…
இந்த நினைவில் எந்த நிலவில்…
எங்கு ஒன்று சேருவோம்…

ஆண் : நடந்த பாதைகள் திரும்பிடுமா…
கடந்த காலங்கள் இனி வருமா…
இன்று இந்த நாள் ஏன் வந்தது…

ஆண் : உயிரை வழி அனுப்ப…
உடல்கள் கூடும் தினமோ… ஒஒஒ…

ஆண் : நந்தவனமே நந்தவனமே…
சொந்தம் சொல்லி போகிறோம்…

—BGM—

ஆண் : முத்து முத்து பனித்துளி…
புல்வெளியில் துள்ளி குதித்த காலமே…
புகைப்படங்கள் ஆகுமே…

ஆண் : வண்ண வண்ண மாடிகள்…
வகுப்பறைகள் வந்து நம்மை தேடுமே…
நொந்து ஜன்னல் மூடுமே…

ஆண் : வகுப்பிலே பெற்ற வரங்கள் சொல்லவா…
குரு தெய்வம் அல்லவா…
கண்ணிரண்டில் சிந்துகின்ற நீரிலே…
நட்பின் கதைகளை சொல்லு ஊரிலே…

ஆண் : பரீட்சை முடிந்த பின்னும்…
பயணம் முடிவதில்லையே…

ஆண் : நந்தவனமே நந்தவனமே…
சொந்தம் சொல்லி போகிறோம்…

—BGM—

ஆண் : சின்ன சின்ன ஊடல்கள்…
சில நேரம் நம்மை சீண்டி பார்த்தது…
அன்பில் அனைத்தும் தோற்றது…

ஆண் : என்ன என்ன தவறுகள்…
செய்தாலும் அதை மறக்கும் நாளிது…
நட்பின் மகுடம் தானிது…

பெண் : நண்பனே நாளை கடிதம் போடுவேன்…
என் கவலை தீருதே…
கட்டிடமும் கலங்கிடும் நாளிது…
அட ஆறுதல் இனி யார் சொல்வது…
பிரிந்து போவதற்கு கூடும் கூட்டம் இதுவோ… ஒஒஒ…

ஆண் : நந்தவனமே நந்தவனமே…
சொந்தம் சொல்லி போகிறோம்…

ஆண் : நந்தவனமே…

—BGM—


Notes : Nandhavaname Nandhavaname Song Lyrics in Tamil. This Song from Jolly (1998). Song Lyrics penned by Vairamuthu. நந்தவனமே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading