நல்ல பேரை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிடி.எம்.சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன்நம் நாடு

Nalla Perai Song Lyrics in Tamil

ஆண் : நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே…
நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே…
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே…
நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே…

ஆண் : நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே…

—BGM—

ஆண் : பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்…
அறிவூட்டும் தந்தை நல் வழி காட்டும் தலைவன்…
பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்…
அறிவூட்டும் தந்தை நல் வழி காட்டும் தலைவன்…

ஆண் : துணையாகக் கொண்டு நீ நடை போடு இன்று…

—BGM—

ஆண் : துணையாகக் கொண்டு நீ நடை போடு இன்று…
உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று…
உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று…

ஆண் : நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே…
நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே…

ஆண் : நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே…

—BGM—

ஆண் : கிளி போலப் பேசு…
இளங்குயில் போலப் பாடு…
மலர் போலச் சிரித்து நீ குறள் போல வாழு…

—BGM—

ஆண் : மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்…
மெய்யான அன்பே தெய்வீகமாகும்…
மெய்யான அன்பே தெய்வீகமாகும்…

ஆண் : நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே…

—BGM—

ஆண் : விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்…
குழு : விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்…

ஆண் : தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்…
குழு : தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்…

ஆண் : ஜன நாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர்…
குழு : ஜன நாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர்…

ஆண் : தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்…
குழு : தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்…

ஆண் : நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே…
நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளைமலரும் முல்லைகளே…

ஆண் : நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே…

—BGM—

Notes : Nalla Perai Song Lyrics in Tamil. This Song from Nam Naadu (1969). Song Lyrics penned by Vaali. நல்ல பேரை பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading