நாரினில் பூ தொடுத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிறைசூடன்இளையராஜா & கே.எஸ். சித்ராஇளையராஜாஇரண்டில் ஒன்று

Naarinil Poo Thoduthu Song Lyrics in Tamil

பெண் : லாலா லாலா லாலா லால்ல லால்ல லா…
லாலா லாலா லாலா லால்ல லால்ல லா…
லால்லா லாலா…

ஆண் : லால்லா லாலா…
பெண் : லால்லா லாலா…
ஆண் : லால்லா லாலா லா…
லால்லா லால்லா லா…

ஆண் : நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன்…
காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே…
அது காயுதிங்கே ஒரு காதல் தீயில்…
இதை யார் தடுப்பாரோ பூங்காற்றே நீயும் சொல்வாய்…

ஆண் : நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன்…
காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே…

—BGM—

ஆண் : உயிர் மூச்சுக் கொஞ்சும் வார்த்தையே பாடல் ஆனதே…
உன் மீது கொண்ட ஆசையே ராகம் ஆனதே…

ஆண் : அசைந்தாடிடும் கண்கள் அது தாளச் சந்தங்கள்…
உறவாடிடும் உள்ளம் தரும் ராக பந்தங்கள்…

ஆண் : வாடுதே என் ஆவியே கேட்குதா என் பாடலே…
தேவியே நீயும் எங்கே பூங்காற்றே நீயும் சொல்வாய்…

ஆண் : நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன்…
காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே…
அது காயுதிங்கே ஒரு காதல் தீயில்…
இதை யார் தடுப்பாரோ பூங்காற்றே நீயும் சொல்வாய்…

ஆண் : நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன்…
காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே…

—BGM—

ஆண் : இள மாலைத் தென்றல் வீசியே என்னை வாட்டுதே…
குளிரோடை துள்ளும் போதிலே உன்னைத் தேடுதே…

ஆண் : உன் கூந்தல் சேராத மலர் வாசம் வீண்தானே…
என் தேவி இல்லாத பொன் மாலை வீண்தானே…

ஆண் : துடிக்குதே என் நெஞ்சமே…
தேடுதே உன் தஞ்சமே…
காதலி நீதான் என்றே பூங்காற்றே நீயும் சொல்வாய்…

ஆண் : நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன்…
காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே…
அது காயுதிங்கே ஒரு காதல் தீயில்…
இதை யார் தடுப்பாரோ பூங்காற்றே நீயும் சொல்வாய்…

ஆண் : நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன்…
காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே…

Notes : Naarinil Poo Thoduthu Song Lyrics in Tamil. This Song from Irandil Ondru (1988). Song Lyrics penned by Piraisoodan. நாரினில் பூ தொடுத்து பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading