மனிதா மனிதா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீநிவாஸ்மணி சா்மாஷாஜகான்

Manidha Manidha Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மனிதா மனிதா…
இதுதான் நீதியோ…
காதல் புரிந்தால்…
கண்ணீர் கூலியோ…
சிறகு விழுந்தால்…
புதிதாய் முளைக்கும்…
வான் வீழ்வதோ… ஹோ… ஓ…

ஆண் : மனிதா மனிதா…
இதுதான் நீதியோ…
காதல் புரிந்தால்…
கண்ணீர் கூலியோ…

—BGM—

ஆண் : பயனிகள் நடப்பார்…
நிழலில் நிழலில்…
நிழல் தரும் மரமோ…
வெயிலில் வெயிலில்…

ஆண் : கடந்தவர் இருப்பார்…
கரையில் கரையில்…
கடத்திய படகோ…
அலையில் அலையில்…

ஆண் : உன் மேல் பிழை இல்லை…
இதில் வருத்தம் உதவாது…
தெய்வம் பிழை செய்தால்…
அதில் திருத்தம் கிடையாது…
விதி வெல்லவா… ஹோ… ஓ…

—BGM—

ஆண் : உயரத்தை குறைத்தால்…
இமயம் ஏது…
துயரத்தை கழித்தால்…
வாழ்க்கை ஏது…

ஆண் : மழை துளி எல்லாம்…
முத்துக்கள் ஆனால்…
மனிதர்கள் பருக…
குடிநீர் ஏது…

ஆண் : மனிதன் கொள்ளும் சோகம்…
அது வாழ்கையின் பாகம்…
எரித்தால் துன்பம் போகும்…
கொஞ்சம் சிரித்தால் அது போகும்…
சிரித்தால் என்ன… ஹோ… ஓ..

ஆண் : மனிதா மனிதா…
இதுதான் நீதியோ…
காதல் புரிந்தால்…
கண்ணீர் கூலியோ…
சிறகு விழுந்தால்…
புதிதாய் முளைக்கும்…
வான் வீழ்வதோ… ஹோ… ஓ…

ஆண் : மனிதா மனிதா…
இதுதான் நீதியோ…
காதல் புரிந்தால்…
கண்ணீர் கூலியோ…


Notes : Manidha Manidha Song Lyrics in Tamil. This Song from Shahjahan (2001). Song Lyrics penned by Vairamuthu. மனிதா மனிதா பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading