மலரே தென்றல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ்இளையராஜாவீட்ல விசேஷங்க

Malare Thendral Song Lyrics in Tamil


ஆண் : மலரே தென்றல் பாடும் கானம் இது…
நிலவே உன்னைக் கூடும் வானம் இது…

BGM

ஆண் : மலரே தென்றல் பாடும் கானம் இது…
நிலவே உன்னைக் கூடும் வானம் இது…

ஆண் : நிலம் இடம் மாறினாலும்…
நிழல் நிறம் மாறினாலும்…
நிலை பெறும் காதல் என்னும்…
நிஜம் நிறம் மாறிடாது…
இறைவனின் தீர்ப்பு இது… ஓஓ…
எவர் இதை மாற்றுவது…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : மலரே தென்றல் பாடும் கானம் இது…

BGM

ஆண் : பூபாளம் கேட்கும் அதிகாலையும்… ம்ம்…
பூஞ்சோலை பூக்கும் இள மாலையும்… ம்ம்…
நீ அன்றி ஏது ஒரு ஞாபகம்… ம்ம்…
நீ பேசும் பேச்சு மணி வாசகம்…

ஆண் : உள்ளம் எனும் வீடெங்கும் உன் அழகை நான்தானே…
சித்திரத்தைப் போல் என்றும் ஒட்டி வைத்துப் பார்த்தேனே…
எனைத் தழுவும் இளம் தளிரே…
உனக்கென நான் வாழ்கிறேன்…

ஆண் : மலரே தென்றல் பாடும் கானம் இது…
நிலவே உன்னைக் கூடும் வானம் இது…

BGM

ஆண் : காட்டாறு போலே சில வேளையில்…
காவேரி ஓடும் பல பாதையில்…
ஆனாலும் ஓர் நாள் கடல் சேர்ந்திடும்…
நாள் ஆன போதும் அது நேர்ந்திடும்…

ஆண் : திக்குத் திசை தோன்றாமல்…
வண்ணக் கிளி போனாலும்…
தான் இருந்த கூட்டைத்தான் தேடி வரும் எந்நாளும்…
இரு மனமும் ஒரு மனதாய் இணைந்திடும் நாள் வாய்த்ததே…

ஆண் : மலரே தென்றல் பாடும் கானம் இது…
நிலவே உன்னைக் கூடும் வானம் இது…

ஆண் : நிலம் இடம் மாறினாலும்…
நிழல் நிறம் மாறினாலும்…
நிலை பெறும் காதல் என்னும்…
நிஜம் நிறம் மாறிடாது…
இறைவனின் தீர்ப்பு இது… ஓஓ…
எவர் இதை மாற்றுவது…

ஆண் : மலரே தென்றல் பாடும் கானம் இது…
நிலவே உன்னைக் கூடும் வானம் இது…


Notes : Malare Thendral Song Lyrics in Tamil. This Song from Veetla Visheshanga (1994). Song Lyrics penned by Vaali. மலரே தென்றல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading