மானாமதுரை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஷங்கர் மகாதேவன்யுவன் ஷங்கர் ராஜாதிமிரு

Maana Madurai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மானாமதுரை குதிரை ஒண்ணு கலக்குதடா…
மாமன் மனச எதிர நின்னு இழுக்குதடா…

ஆண் : மேலமாசி வீதி வரை…
மதுரைக்கு நாங்க துரை…
தாவணிய பாத்தா மட்டும் ஞானப்பழம் நாங்க…

ஆண் : பொண்ணுங்கள பாக்க மாட்டோம்…
பாத்தாலும் பேச மாட்டோம்…
அப்படியே பேசினா அய்யோ அய்யயோ…

குழு : போடு ஒன்னா ஆட்டம் போடு…
போடா ஒழுங்கா கடலை போடு…
போடு புதுசா நோட்டம் போடு…
அழகா இருந்தா தோட்டம் போடு…

ஆண் : ஏ மானாமதுரை குதிரை ஒண்ணு கலக்குதடா…
ஏ மாமன் மனச எதிர நின்னு இழுக்குதடா…

—BGM—

ஆண் : கம்மாங்கோட்டல் அயிர மீனு கண் உனக்கு…
கோனார் கடை கொத்துக்கறி கண் எனக்கு…
திண்டுக்கல்லு திராட்சை கொடி பழுத்திருக்கு…
அறுவடைக்கு எக்கசக்க ஆள் இருக்கு…

ஆண் : குறுக்க பாத்ததுக்கே பல குடும்பத்தில் சண்டையடி…
எதிர்க்க பாத்துப்புட்டா நெஞ்சில் நெருப்பே எறியுதடி… யே…

குழு : கட்டிப்போடு என்னை கட்டிப்போடு…
குத்து போட என்ன கட்டுப்பாடு
வட்டம் போடு என்னை வட்டம் போடு…
வெட்கம் எதுக்கு அதை விட்டுப்போடு…

ஆண் : ஏ மானாமதுரை குதிரை ஒண்ணு கலக்குதடா…
ஏ மாமன் மனச எதிர நின்னு இழுக்குதடா…

—BGM—

குழு : அண்ணணுக்கு ஜே…
தலைவனுக்கு ஜே…
அண்ணணுக்கு ஜே…
தலைவனுக்கு ஜே…

—BGM—

ஆண் : தாஜ் மஹால் தேனியில கட்டட்டுமா…
ஹாஜி மூசா சேலை வாங்கி கொடுக்கட்டுமா…
தேக்கடிக்கு டிக்கெட் ரெண்டு எடுக்கட்டுமா…
தாகத்துக்கு ஜிகர்தண்டா கலக்கட்டுமா…

ஆண் : மெதுவா நீ பார்த்தா மதுரை நான் தாரேன்…
தங்கமே நீ சிரிச்சா தமிழ்நாட்டையே நான் தாரேன்…

ஆண் : கம்மங்காடு நீ கம்மங்காடு…
குறும்பாடு ரொம்ப பசியோடு…
சோளக்காடு நீ சோளக்காடு…
சிட்டுக்குருவி வந்தா மாலை போடு…

ஆண் : ஏ மானாமதுரை குதிரை ஒண்ணு கலக்குதடா…
ஏ மாமன் மனச எதிர நின்னு இழுக்குதடா…

ஆண் : மேலமாசி வீதி வரை…
மதுரைக்கு நாங்க துரை…
தாவணிய பாத்தா மட்டும் ஞானப்பழம் நாங்க…

ஆண் : பொண்ணுங்கள பாக்க மாட்டோம்…
பாத்தாலும் பேச மாட்டோம்…
அப்படியே பேசினா அய்யோ அய்யயோ…

குழு : போடு ஒன்னா ஆட்டம் போடு…
போடா ஒழுங்கா கடலை போடு…
போடு புதுசா நோட்டம் போடு…
அழகா இருந்தா தோட்டம் போடு…

—BGM—


Notes : Maana Madurai Song Lyrics in Tamil. This Song from Thimiru (2006). Song Lyrics penned by Na. Muthukumar. மானாமதுரை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading