காதோரம் லோலாக்கு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகி & மனோஇளையராஜாசின்ன மாப்பிள்ளை

Kathoram Lolakku Song Lyrics in Tamil


BGM

பெண் : காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா…
காத்தாடும் மேலாக்கு உன்னை தின்னுதையா…

ஆண் : காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி…
காத்தாடும் மேலாக்கு என்னை தின்னுதடி…

பெண் : உன் முகத்த பார்க்கையில…
என் முகத்தை நான் மறந்தேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி…
காதோரம் லோலாக்கு…

BGM

பெண் : நான் விரும்பும் மாப்பிள்ளைக்கு…
நாள் கணக்கா காத்திருந்தேன்…
நான் விரும்பும் மாப்பிள்ளைக்கு…
நாள் கணக்கா காத்திருந்தேன்…

பெண் : வந்தாயே நீயும் வாசலை தேடி…
கண்டேனே நானும் எனக்கொரு ஜோடி…

ஆண் : உன்னாட்டம்தான் தங்கத்தேரு…
கண்டதில்லை எங்க ஊரு…
காதல் போதை தந்த கள்ளி…
கந்தன் தேடி வந்த வள்ளி…

பெண் : நீ தொடத்தானே நான் பொறந்தேன்…
நாளொரு வண்ணம் நான் வளர்ந்தேன்…

ஆண் : காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி…
காத்தாடும் மேலாக்கு என்னை தின்னுதடி…

பெண் : காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா…
காதோரம் லோலாக்கு…

BGM

ஆண் : வானவில்ல விலை கொடுத்து…
வாங்கிடத்தான் காசிருக்கு…
வானவில்ல விலை கொடுத்து…
வாங்கிடத்தான் காசிருக்கு…

ஆண் : என் கூட உன் போல் ஓவியப் பாவை…
இல்லாமல் போனால் நான் ஒரு ஏழை…

பெண் : எந்நாளும் நான் உந்தன் சொத்து…
இஷ்டம் போல அள்ளி கட்டு…
மேலும் கீழும் என்னை தொட்டு…
மேளம் போலே என்னைத் தட்டு…

ஆண் : நான் அதற்காக காத்திருந்தேனே…
நீ வரும் பாதை பார்த்திருந்தேன்…

பெண் : காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா…
காத்தாடும் மேலாக்கு உன்னை தின்னுதையா…

ஆண் : உன் முகத்த பார்க்கையில…
என் முகத்தை நான் மறந்தேன்…

பெண் : காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா…
காத்தாடும் மேலாக்கு உன்னை தின்னுதையா…

ஆண் : காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி…
காத்தாடும் மேலாக்கு என்னை தின்னுதடி…


Notes : Kathoram Lolakku Song Lyrics in Tamil. This Song from Chinna Mapillai (1993). Song Lyrics penned by Vaali. காதோரம் லோலாக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading