கருவாப் பையா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
Unknownகே.எஸ். சித்ரா & திப்புபிரவின் மணிதூத்துக்குடி

Karuvappaiya Song Lyrics in Tamil


BGM

பெண் : கருவாப் பையா கருவாப் பையா…
கருவாப் பையா கருவாப் பையா…
கருவாச்சி கவுந்துபுட்டா மனசாட்ச தொலைச்சுப்புட்டா…

பெண் : கருவாப் பையா கருவாப் பையா…
கருவாப் பையா கருவாப் பையா… ஆ…

பெண் : குண்டூசி மீசைக் குத்தி மேலுதடு காயமாச்சு…
கிறுக்குப் பய பல்லு பட்டு கீழுதடு சாயம் போச்சு…
கிச்சு கிச்சு தாம்பலத்தில் உசுர வச்சு விளையாடுறேன்…
நீதான் வந்து கண்டு புடிக்கணும்டா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கருவாப் பையா கருவாப் பையா…
கருவாப் பையா கருவாப் பையா…

BGM

ஆண் : வீச்சருவா புடிக்கிற வித்தை தெரிஞ்சவன்…
புத்தகத்த சுமக்கிற பூவ ரசிக்கிறேன்…

பெண் : ஆத்திச்சூடி பாடத்த நித்தம் சொன்னவ…
வள்ளுவனின் மூன்றாம் பால் தேடி படிக்கிறேன்… ஏ…

ஆண் : சோளக்காட்டு பொம்மையப் போல்…
ஒத்தையிலே நின்னேனே…

பெண் : சோடி வரம் கேட்டு உந்தன் துணைக்கு…
நானும் வந்தேனே… ஆ…

ஆண் : ஒடுக்கப்பட்ட கல்லு இவ மூலக்கல்லா ஆகிடத்தான்…
காதல் என்னும் உளி வச்சு ஒடச்சேன்…

பெண் : கருவாப் பையா கருவாப் பையா…
கருவாப் பையா கருவாப் பையா…

BGM

பெண் : கட்டப்புலி மாடனுக்கு பொங்க வச்சுத்தான்…
கட்டபொம்மன் உன்னோட கைய புடிக்கிறேன்…

ஆண் : தேவதைய சேரத்தான் தெற்கே உதிச்சவன்…
தேனெடுக்கும் நெனப்புல ஓடா இளைக்கிறேன்…

பெண் : ஏ… கொப்பர தேங்காப் பூவ உனக்கு தந்தேனே…
ஆண் : திருவலா மாறி உன்ன திருவிப்புட்டேனே…

பெண் : ஆ… சின்னப் புள்ள ராசாத்தி செம்புலிங்கத்த நேர்ந்துகிட்டேன்…
ரெட்டப்புள்ள பெத்துக் கொடுக்கிறேன் டா…

பெண் : கருவாப் பையா கருவாப் பையா…
கருவாப் பையா கருவாப் பையா…

ஆண் : ஏ… கருவாச்ச கவுத்துப் புட்டேன்…
மனசாட்ச புடிச்சிப் புட்டேன்…

பெண் : கருவாப் பையா கருவாப் பையா…
கருவாப் பையா கருவாப் பையா…

பெண் : குண்டூசி மீசைக் குத்தி மேலுதடு காயமாச்சு…
கிறுக்குப் பய பல்லு பட்டு கீழுதடு சாயம் போச்சு…
கிச்சு கிச்சு தாம்பலத்தில் உசுர வச்சு விளையாடுறேன்…
நீ தான் வந்து கண்டு புடிக்கணும்டா…

பெண் : கருவாப் பையா கருவாப் பையா…
கருவாப் பையா கருவாப் பையா…


Notes : Karuvappaiya Song Lyrics in Tamil. This Song from Thoothukudi (2006). Song Lyrics penned by Unknown. கருவாப் பையா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading