கண்ணுக்குள்ளே காதலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி. உன்னிகிருஷ்ணன் & சுவர்ணலதாபரத்வாஜ்தமிழ்

Kannukkulle Kadhala Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கண்ணுக்குள்ளே காதலா…
கண்டதும் நெஞ்சில் தென்றலா…

ஆண் : என்னை ஏதோ செய்கிறாய்…
என்னில் ஏதோ கொய்கிறாய்…
மன வயல் எங்கும் இன்று மோக மழை பெய்கிறாய்…
என்னை கொஞ்சம் செல்லமாக நெஞ்சுக்குள்ளே வைகிறாய்…

பெண் : நான்கு கண்கள் உள்ளதே…
உன் காதல் ஒன்றுதான்…

ஆண் : கண்டுகொண்டேன் நானும் அதை…
உன்னால் இன்றுதான்…

ஆண் : கண்ணுக்குள்ளே காதலா…
கண்டதும் நெஞ்சில் தென்றலா… ஆஆ…

—BGM—

ஆண் : ஊரறிந்த செய்தி காதல் உயிரை வாங்கும் வியாதி…
அதை வருமுன் தடுக்கும் தடுப்பு ஊசி உலகில் இல்லையே…

ஆண் : உன்னை பற்றி பாட…
தமிழில் எங்கு வார்த்தை தேட…
அதன் பதினெட்டு மெய்யும்…
பன்னிரு உயிரும் போதாதல்லவா…

ஆண் : நீ ஆசை மொழியின் நக கண்தான்…
நீ நகர்ந்தால் நகரும் நகரம்தான்…

பெண் : நீ ஆண்கள் ஜாதியில் சைவம்தான்…
உன் அசைவால் நானே அசைவம்தான்…

ஆண் : தலைக்கேறும் போதை தடுமாறும் பெண்ணே…

ஆண் : கண்ணுக்குள்ளே காதலா…
கண்டதும் நெஞ்சில் தென்றலா… ஆஆ…

—BGM—

ஆண் : காவல் நிலையம் சென்று…
தூக்கம் களவு போச்சு என்று…
என் விழிகள் இரண்டும் யார் யார் மீதோ…
குற்றம் சாட்டுமே…

—BGM—

ஆண் : உன்னை பற்றி மெல்ல…
நான்தான் உளவு பார்த்து சொல்ல…
அடி உன்னை பிடித்து காவல் துறைதான்…
கூண்டில் ஏற்றுமே…

ஆண் : என் இமையை மெதுவாய் வருடாதே…
என் துயிலை தினமும் திருடாதே…

பெண் : நீ விழியால் மனதை உழுதாயே…
ஒரு விதையாய் நீயே விழுந்தாயே…

ஆண் : உயிர் காதல் பூவே நீதானே வாழ்வே…

ஆண் : கண்ணுக்குள்ளே காதலா…
கண்டதும் நெஞ்சில் தென்றலா…

ஆண் : என்னை ஏதோ செய்கிறாய்…
என்னில் ஏதோ கொய்கிறாய்…
மன வயல் எங்கும் இன்று மோக மழை பெய்கிறாய்…
என்னை கொஞ்சம் செல்லமாக நெஞ்சுக்குள்ளே வைகிறாய்…

பெண் : நான்கு கண்கள் உள்ளதே…
உன் காதல் ஒன்றுதான்…

ஆண் : கண்டுகொண்டேன் நானும் அதை…
உன்னால் இன்று தான்…

ஆண் : கண்ணுக்குள்ளே காதலா…
கண்டதும் நெஞ்சில் தென்றலா…


Notes : Kannukkulle Kadhala Song Lyrics in Tamil. This Song from Thamizh (2002). Song Lyrics penned by Vaali. கண்ணுக்குள்ளே காதலா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading