கனிமொழியே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகார்த்திக் & மேகாஹாரிஸ் ஜெயராஜ்இரண்டாம் உலகம்

Kani Mozhiyae Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கனிமொழியே…
என்னை கொன்று போகிறாய்…
கடை விழியால்…
என்னை தின்று போகிறாய்…

ஆண் : கனிமொழியே…
என்னை கொன்று போகிறாய்…
கடை விழியால்…
என்னை தின்று போகிறாய்…

ஆண் : இதயம் உடைத்து என்னை வாழ சொல்கிறாய்…
இமைகள் பறித்து என்னை தூங்க சொல்கிறாய்…
ஒரு பாதிக் கண்ணில் காதல் செய்கிறாய்…
மறு பாதிக் கண்ணில் ஊடல் செய்கிறாய்…

ஆண் : நான் எட்டு திக்கும் அலைகிறேன்…
நீ இல்லை என்று போவதா…
அடி பற்றி எரியும் காட்டிலே…
நான் பட்டாம்பூச்சி ஆவதா…

ஆண் : நான் எட்டு திக்கும் அலைகிறேன்…
நீ இல்லை என்று போவதா…
அடி பற்றி எரியும் காட்டிலே…
நான் பட்டாம்பூச்சி ஆவதா…

—BGM—

ஆண் : உந்தன் கன்னத்தோடு…
எந்தன் கன்னம் வைத்தால்…
நானும் மண்ணில் கொஞ்சம் வாழ்ந்திருப்போன்…

ஆண் : அடி உந்தன் கன்னக் குழியில்…
என்னை புதைத்து வைத்தால்…
மண்ணில் மாண்ட பின்னும் வாழ்ந்திருப்பேன்…

ஆண் : ஒரு கள்ளப் பார்வை பார் அழகே…
ஒரு கள்ளப் பார்வை பார் அழகே…
சிறு காதல் பேசும் ஊமை கிளியே…
சிறு காதல் பேசும் ஊமை கிளியே…

ஆண் : நான் தேடி திரியும் வாழ்வே நீ தானே…
தென்றலே வா முன்னே…
முத்தமா கேட்கிறேன்…
முருவல்தான் கேட்கிறேன்…

ஆண் : கனிமொழியே… ம்ம் ம்ம் ம்…
கடைவிழியால்… ம்ம் ம்ம் ம்…

—BGM—

ஆண் : பறவை பறக்கும் போது…
ஆகாயம் தொலைந்து போகும்…
பார்வை பறவை மீதே பதிந்திருக்கும்…

ஆண் : விழி உன்னை காணும் போது…
உலகம் தொலைந்து போகும்…
என் கண்கள் உந்தன் மீதே விழுந்திருக்கும்…

ஆண் : என்னை கட்டி போடும் காந்தச்சிமிலே…

பெண் : ஆஅ… ஆஆ… ஆஅ…

ஆண் : ஒரு பாட்டு பாடு காட்டுக் குயிலே…
என் காலை கனவின் ஈரம் நீதானே…
வாழலாம் வா பெண்ணே…
வலது கால் எட்டு வை…
வாழ்க்கையை தொட்டு வை…

ஆண் : கனிமொழியே…
கனிமொழியே…
என்னை கொன்று போகிறாய்…
கடை விழியால்…
கடை விழியால்…
என்னை தின்று போகிறாய்…

பெண் : இதயம் உடைத்து என்னை வாழ சொல்கிறாய்…
இமைகள் பறித்து என்னை தூங்க சொல்கிறாய்…

ஆண் : ஒரு பாதிக் கண்ணில் காதல் செய்கிறாய்…
மறு பாதிக் கண்ணில் ஊடல் செய்கிறாய்…

ஆண் : நான் எட்டு திக்கும் அலைகிறேன்…
நீ இல்லை என்று போவதா…
அடி பற்றி எரியும் காட்டிலே…
நான் பட்டாம்பூச்சி ஆவதா…

ஆண் : நான் எட்டு திக்கும் அலைகிறேன்…
நீ இல்லை என்று போவதா…
அடி பற்றி எரியும் காட்டிலே…
நான் பட்டாம்பூச்சி ஆவதா…

—BGM—


Notes : Kani Mozhiyae Song Lyrics in Tamil. This Song from Irandaam Ulagam (2013). Song Lyrics penned by Vairamuthu. கனிமொழியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading