கண்களை தூதுவிட்டேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுவர்ணலதாவித்யாசாகர்முறை மாமன்

Kangalai Thoothuviten Song Lyrics in Tamil

பெண் : கண்களை தூதுவிட்டேன் தலைவா தலைவா…
என் பெண்மையை உன்னிடத்தில் தரவா தரவா…

பெண் : ராமனை தள்ளி வைத்த சீதையும் நான் அல்லவா…
மன்னித்து பூ வழங்கு மங்கள பொன் மன்னவா…

பெண் : விண்ணும் மண்ணும் இன்று தொட்டு கொள்ளும் என்று…
புத்தம் புது சொர்க்கம் நித்தம் சொந்தமென்று…
சொல்லு சொல்லை சொல்லு சொல்லை சொல்லு சொல்லு…

பெண் : கண்களை தூது விட்டேன் தலைவா தலைவா…
என் பெண்மையை உன்னிடத்தில் தரவா தரவா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : மன்னவனே உன் மடியில் காலமெல்லாம் சாய்ந்திருப்பேன்…
கை விளக்க நேரமில்லை கண்ண மணிக்குள் சேர்ந்திருப்பேன்…

பெண் : மன்னவனே உன் மடியில் காலமெல்லாம் சாய்ந்திருப்பேன்…
கை விளக்க நேரமில்லை கண் மணிக்குள் சேர்ந்திருப்பேன்…

பெண் : ஏணி மேல் ஏணி கொண்டு வான் வெளியில் பூ பறிப்பேன்…
ஏழு ஜென்மம் உள்ளதெல்லாம் இந்த ஜென்மம் வாழ்ந்திருப்பேன்…

பெண் : விண்ணும் மண்ணும் இன்று தொட்டு கொள்ளும் என்று…
புத்தம் புது சொர்க்கம் நித்தம் சொந்தமென்று…
சொல்லு சொல்லை சொல்லு சொல்லை சொல்லு சொல்லு…

பெண் : கண்களை தூது விட்டேன் தலைவா தலைவா…
என் பெண்மையை உன்னிடத்தில் தரவா தரவா…

BGM

பெண் : போனதெல்லாம் போகட்டுமே பூ மகளை வாழ விடு…
பூ மகளை வாழ வைத்து பொன் மகனே வாழ்ந்து விடு…
போனதெல்லாம் போகட்டுமே பூ மகளை வாழ விடு…
பூ மகளை வாழ வைத்து பொன் மகனே வாழ்ந்து விடு…

பெண் : கண்களுக்குள் உன்னை வைத்து காப்பதுதான் என் கடமை…
கட்டில் என்னும் ராஜ்யத்தில் காதலி நான் உன் அடிமை…

பெண் : விண்ணும் மண்ணும் இன்று தொட்டு கொள்ளும் என்று…
புத்தம் புது சொர்க்கம் நித்தம் சொந்தமென்று…
சொல்லு சொல்லை சொல்லு சொல்லை சொல்லு சொல்லு…

பெண் : கண்களை தூது விட்டேன் தலைவா தலைவா…
என் பெண்மையை உன்னிடத்தில் தரவா தரவா…

பெண் : ராமனை தள்ளி வைத்த சீதையும் நான் அல்லவா…
மன்னித்து பூ வழங்கு மங்கள பொன் மன்னவா…

பெண் : விண்ணும் மண்ணும் இன்று தொட்டு கொள்ளும் என்று…
புத்தம் புது சொர்க்கம் நித்தம் சொந்தமென்று…
சொல்லு சொல்லை சொல்லு சொல்லை சொல்லு சொல்லு…

பெண் : கண்களை தூது விட்டேன் தலைவா தலைவா…
என் பெண்மையை உன்னிடத்தில் தரவா தரவா…

Notes : Kangalai Thoothuviten Song Lyrics in Tamil. This Song from Murai Maman (1995). Song Lyrics penned by Vairamuthu. கண்களை தூதுவிட்டேன் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading