கனா காணும் நேரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆபாவாணன்எஸ்.பி. பாலசுப்ரமணியம்அரவிந்த் சித்தார்த்தாகாவியத்தலைவன் (1992)

Kana Kanum Neram Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹே… கனா காணும் நேரம்…
கண்ணில் ஏக்கம் தீருமா…

—BGM—

ஆண் : ஹே… காமன் விட்ட பாணம்…
நெஞ்சில் காயம் ஆறுமா…

—BGM—

ஆண் : ஒரு இரவிலும் ஆறலாம்…
சில தினங்களும் கூடலாம்…
பல தலைமுறை தொடர்கின்ற சாபம்…
நீ மறுத்தால் மாறுமா…

ஆண் : ஹே… கனா காணும் நேரம்…
கண்ணில் ஏக்கம் தீருமா…

—BGM—

ஆண் : தள்ளித் தள்ளி போனது போதும்…
அள்ளிக் கொள்ள ஏங்குது நாளும்…
சொல்லிச் சொல்லி தந்தது மோகம்…
பள்ளி கொள்ள இது நேரம்…

ஆண் : சின்ன இடையினிலே குடி இருக்கட்டுமா…
சிந்தும் இதழினிலே நான் குளிக்கட்டுமா…
சின்ன இடையினிலே குடி இருக்கட்டுமா…
சிந்தும் இதழினிலே நான் குளிக்கட்டுமா…

ஆண் : உனை தொட்ட சுகம் இனி தொடரட்டுமே…
அது தொடர்வதனால் மனம் குளிரட்டுமே…

ஆண் : ஹே… கனா காணும் நேரம்…
கண்ணில் ஏக்கம் தீருமா…

—BGM—

ஆண் : ஹே… காமன் விட்ட பாணம்…
நெஞ்சில் காயம் ஆறுமா…

—BGM—

ஆண் : ஊரைச் சொல்லி வருவது பாதை…
உறவைச் சொல்லி வருவது வாழ்க்கை…
யாரைச் சொல்லி வருவாள் மனைவி…
துணை பேரைச் சொல்வாள் பெருந்துணைவி…

ஆண் : உன் துணையாலே வாழ்வு வளம் பெறணும்…
என்னை புரிந்து கொண்டு நீயும் சுகம் பெறணும்…
உன் துணையாலே வாழ்வு வளம் பெறணும்…
என்னை புரிந்து கொண்டு நீயும் சுகம் பெறணும்…

ஆண் : உனை தொட்ட சுகம் இனி தொடரட்டுமே…
அது தொடர்வதனால் மனம் குளிரட்டுமே…

ஆண் : ஹேஹேஹே… கனா காணும் நேரம்…
கண்ணில் ஏக்கம் தீருமா…

—BGM—

ஆண் : ஹே… காமன் விட்ட பாணம்…
நெஞ்சில் காயம் ஆறுமா…

—BGM—

ஆண் : ஒரு இரவிலும் ஆறலாம்…
சில தினங்களும் கூடலாம்…
பல தலைமுறை தொடர்கின்ற சாபம்…
நீ மறுத்தால் மாறுமா…

ஆண் : ஹே… கனா காணும் நேரம்…
கண்ணில் ஏக்கம் தீருமா…

—BGM—


Notes : Kana Kanum Neram Song Lyrics in Tamil. This Song from Kaviya Thalaivan (1992). Song Lyrics penned by Aabaavanan. கனா காணும் நேரம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading