காதல் வந்தால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துதிப்பு & மாணிக்க விநாயகம்வித்யாசாகர்இயற்கை

Kadhal Vandhal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காதல் வந்தால் சொல்லி அனுப்பு…
உயிரோடிருந்தால் வருகிறேன்…
என் கண்ணீர் வழியே உயிரும் வழிய…
கரையில் கரைந்து கிடக்கிறேன்…

ஆண் : சுட்ட மண்ணிலே மீனாக…
மனம் வெட்ட வெளியிலே வாடுதடி…
சுட்ட மண்ணிலே மீனாக…
மனம் வெட்ட வெளியிலே வாடுதடி…
கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து…
கடல் நீர் மட்டம் கூடுதடி…

ஆண் : காதல் வந்தால் சொல்லி அனுப்பு…
உயிரோடிருந்தால் வருகிறேன்…

—BGM—

ஆண் : உயிரை தவிர சொந்தம் இல்லையே…
காதலிக்கும் முன்பு…
இந்த உலகே எந்தன் சொந்தம் ஆனதே…
காதல் வந்த பின்பு…

—BGM—

ஆண் : சாவை அழைத்து கடிதம் போட்டேன்…
காதலிக்கும் முன்பு…
ஒரு சாவை புதைக்க சக்தி கேட்கிறேன்…
காதல் வந்த பின்பு…

ஆண் : உன்னால் என் கடல் அலை…
உறங்கவே இல்லை…
உன்னால் என் நிலவுக்கு…
உடல் நலம் இல்லை…

ஆண் : கடல் துயில் கொள்வதும்…
நிலா குணம் கொள்வதும்…
நான் உயிர் வாழ்வதும்…
உன் சொல்லில் உள்ளதடி…

ஆண் : உன் இறுக்கம்தான் என் உயிரை…
கொல்லுதடி கொல்லுதடி…

—BGM—

ஆண் : காதல் வந்தால் சொல்லி அனுப்பு…
உயிரோடிருந்தால் வருகிறேன்…
என் கண்ணில்…

—BGM—

ஆண் : பிறந்த மண்ணை அள்ளி தின்றேன்…
உன்னை காணும் முன்பு…
நீ நடந்த மண்ணை அள்ளி தின்றேன்…
உன்னை கண்ட பின்பு…

—BGM—

ஆண் : அன்னை தந்தை கண்டதில்லை நான்…
கண் திறந்த பின்பு…
என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன்…
உன்னை கண்ட பின்பு…

ஆண் : பெண்ணே என் பயணமோ…
தொடங்கவே இல்லை…
அதற்குள் அது முடிவதா…
விளங்கவே இல்லை…

ஆண் : நான் கரையாவதும்…
இல்லை நுரையாவதும்…
வளர் பிறையாவதும்…
உன் சொல்லில் உள்ளதடி…

ஆண் : உன் இறுக்கம்தான் என் உயிரை…
கொல்லுதடி கொல்லுதடி…

—BGM—

ஆண் : காதல் வந்தால் சொல்லி அனுப்பு…
காதல் வந்தால் சொல்லி அனுப்பு…
சொல்லி அனுப்பு…
சொல்லி அனுப்பு…


Notes : Kadhal Vandhal Song Lyrics in Tamil. This Song from Iyarkai (2003). Song Lyrics penned by Vairamuthu. காதல் வந்தால் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading