| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| கு மா பாலசுப்ரமணியம் | பி.பி. ஸ்ரீனிவோஸ் & பி. சுசீலா | ஜி. ராமநாதன் | வீரபாண்டிய கட்டபொம்மன் |
Inbam Pongum Vennila Song Lyrics in Tamil
—BGM—
பெண் : இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே…
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே…
என்னைக் கண்டு…
ஆண் : உன்னைக் கண்டு…
பெண் : என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே…
பெண் : இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே…
ஆண் : தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே…
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே…
இதை எண்ணி எண்ணி…
பெண் : எண்ணி எண்ணி…
ஆண் : எண்ணி எண்ணி எந்தன் நெஞ்சம் ஏங்குதே…
பெண் : இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே…
—BGM—
பெண் : கண்கள் நாடும் கண்ணாளா எந்தன் ஜீவனே…
எந்த நாளும் உன் சொந்தம்தான் ஆண் எழிலே…
—BGM—
பெண் : கண்கள் நாடும் கண்ணாளா எந்தன் ஜீவனே…
எந்த நாளும் உன் சொந்தம்தான் ஆண் எழிலே…
கொஞ்சிப் பேசும் நம் எண்ணம் போல் பாரிலே…
இனி கொள்ளை கொள்ளை இன்பம்தானே வாழ்விலே…
பெண் : இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே…
—BGM—
ஆண் : துள்ளி ஆடும் பெண் மானே எந்தன் வாழ்விலே…
இன்ப தீபம் உன் ரூபம் தான் மாமயிலே…
—BGM—
ஆண் : துள்ளி ஆடும் பெண் மானே எந்தன் வாழ்விலே…
இன்ப தீபம் உன் ரூபம்தான் மாமயிலே…
வெள்ளம் போலே என் ஆவல் மீறுதே…
ஒரு எல்லையில்லா இன்பம் அலை மோதுதே…
ஆண் : தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே…
—BGM—
பெண் : அன்பில் ஊறும் மெய்க் காதல் போலே பாரிலே…
இன்பம் எதும் வேறில்லையே ஆருயிரே…
ஆண் : கன்னல் சாறும் உன் சொல்லைப் போல் ஆகுமோ…
என்னைக் கண்டும் உந்தன் வண்டு விழி நாணுமோ…
பெண் : இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே…
என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே…
ஆண் : தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே…
எண்ணி எண்ணி எந்தன் நெஞ்சம் ஏங்குதே…
ஆண் & பெண் : இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே…
Notes : Inbam Pongum Vennila Song Lyrics in Tamil. This Song from Veerapandiya Kattabomman (1959). Song Lyrics penned by Ku Ma Balasubramaniam. இன்பம் பொங்கும் பாடல் வரிகள்.
