| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| ஆர்.பி.பாலா | சத்யபிரகாஷ் & சின்மயி | ரோனி ரபேல் | மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் |
Ilaveyil Song Lyrics in Tamil
பெண் : கண்ணா நீ நினைபதென்ன…
ராதையின் ராகங்களா…
உந்தன் மனம் மகிழ்ந்திட…
உயிர் பூக்களால் பூஜை செய்தேன்…
—BGM—
ஆண் : இளவெயில் இலைகளில் ஒளிர…
இந்த யமுனையும் யுவதியாய் மிளிர…
இதம் தரும் இளமையின் காற்றாய்…
தழுவிடவே வா என் இனியவளே வா…
பெண் : சின்ன சின்ன மழை துளி சிதற…
இந்த மலர்களம் வனமென வளர…
மரங்கொத்தி பறவையை போலே…
மனம் துளைத்தாய் வா என் மன்மதனே வா…
ஆண் : என் மனவானில் நீ பொன் ஊஞ்சல் ஆடி…
மின்னும் நிலவே என் சுவாசம் நீயே…
பெண் : மன்னவன் தோளில் மலர்கொடியானேன்…
உன்னோடு என்னை உள்வாங்கி கொள்வாய் நீ…
ஆண் : இளவெயில் இலைகளில் ஒளிர…
இந்த யமுனையும் யுவதியாய் மிளிர…
இதம் தரும் இளமையின் காற்றாய்…
தழுவிடவே வா என் இனியவளே வா…
—BGM—
பெண் : வண்ண ஜாலம் நிகழ்ந்தும்…
வானின் மின்னல் போல வந்தாய்…
கண்ணில் கோலம் வரைந்தே…
உன்னை என்னில் ஏற்க நின்றேன்…
ஆண் : உன்னை கண்ட நொடியில்…
நானோ என்னை இழந்து போனேன்…
பெண்ணே உன்னை வடிக்க…
பிரம்மன் செய்ததென்ன தவமோ…
பெண் : உனக்குள்ளே உருகுகிறேனே…
ஆண் : உயிர் நீயே உன்னில் கலந்தேனே…
பெண் : வரனே உன் வசமானேன்…
புது வரவுக்கு வழியை விடு…
ஆண் : சகியே நான் உனதானேன்…
இனி சந்தோஷ உல்லாச சரசமிடு…
பெண் : சின்ன சின்ன மழை துளி சிதற…
இந்த மலர்களம் வனமென வளர…
மரங்கொத்தி பறவையை போலே…
மனம் துளைத்தாய் வா என் மன்மதனே வா…
—BGM—
ஆண் : தேனை உண்ணும் வண்டாய்…
மலர் உன்னை தேடி வந்து நின்றேன்…
வீணை மீட்டும் விரல் போல்…
விழிகளில் ஜாடை காட்டி வென்றாய்…
பெண் : வானவில்லை போலே…
வாழ்வில் வண்ணம் சேர்க்க வந்தாய்…
ஞான கள்வனாக என்னுள்…
கன்னம் இட்டு நுழைந்தாய்…
ஆண் : மணம் வீசும் மலர் அல்லவோ நீ…
பெண் : ஓ… மனம் பேசும் மதனல்லவோ நீ…
ஆண் : ஸ்ருதியோடு ஜதி போல…
இனி இருவரும் இசைந்திருப்போம்…
பெண் : கடல் சேரும் நதி போல…
தனி உல்லாச தடங்களை வகுத்திடுவோம்…
ஆண் : இளவெயில் இலைகளில் ஒளிர…
இந்த யமுனையும் யுவதியாய் மிளிர…
இதம் தரும் இளமையின் காற்றாய்…
தழுவிடவே வா என் இனியவளே வா…
Notes : Ilaveyil Song Lyrics in Tamil. This Song from Maraikkayar Arabikadalin Singam (2021). Song Lyrics penned by R.P.Bala. இளவெயில் இலைகளில் பாடல் வரிகள்.
