எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்ஹம்சலேகாகேப்டன் மகள்

Endha Pennilum Illada Ondru Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று…
ஏதோ… அது ஏதோ…
அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது…

ஆண் : அதை அறியாமல் விடமாட்டேன்…
அது வரை உன்னை தொடமாட்டேன்…

ஆண் : எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று…
ஏதோ… அது ஏதோ…
அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது…

ஆண் : அதை அறியாமல் விடமாட்டேன்…
அது வரை உன்னை தொடமாட்டேன்…

ஆண் : எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று…
ஏதோ… அது ஏதோ…
அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது…

—BGM—

ஆண் : கூந்தல் முடிகள்…
நெற்றி பரப்பில்…
கோலம் போடுதே அதுவா…
கோலம் போடுதே அதுவா…

ஆண் : சிரிக்கும் போது…
கண்ணில் மின்னல்…
தெறித்து ஓடுதே அதுவா…
தெறித்து ஓடுதே அதுவா…

ஆண் : மூக்கின் மேலே மூக்குத்தி போலே…
மச்சம் உள்ளதே…
அதுவா அதுவா அதுவா…

ஆண் : கழுத்தின் கீழே கவிதைகள் ரெண்டு…
மிச்சம் உள்ளதே…
அதுவா அதுவா அதுவா…

ஆண் : அதை அறியாமல் விடமாட்டேன்…
அது வரை உன்னை தொடமாட்டேன்…

ஆண் : எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று…
ஏதோ… அது ஏதோ…
அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது…

—BGM—

ஆண் : முல்லை நிறத்து…
பற்களில் ஒன்று…
தள்ளி உள்ளதே அதுவா…
தள்ளி உள்ளதே அதுவா…

ஆண் : சங்கு கழுத்தை…
பாசி மணிகள்…
தடவுகின்றதே அதுவா…
தடவுகின்றதே அதுவா…

ஆண் : ஒவ்வொரு வாக்கியம் முடியும் போதும்…
புன்னகை செய்வாய்…
அதுவா அதுவா அதுவா…

ஆண் : ஓரிரு வார்த்தை தப்பாய் போனால்…
உதடு கடிப்பாய்…
அதுவா அதுவா அதுவா…

ஆண் : அதை அறியாமல் விடமாட்டேன்…
அது வரை உன்னை தொடமாட்டேன்…

ஆண் : எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று…
ஏதோ… அது ஏதோ…
அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது…

ஆண் : அதை அறியாமல் விடமாட்டேன்…
அது வரை உன்னை தொடமாட்டேன்…

ஆண் : எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று…
ஏதோ… அது ஏதோ…
அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது…


Notes : Endha Pennilum Illada Ondru Song Lyrics in Tamil. This Song from Captain Magal (1993). Song Lyrics penned by Vairamuthu. எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading