என் ஊரு மதுர பக்கம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே. ஜே. யேசுதாஸ்தேவாவாசலில் ஒரு வெண்ணிலா

En Ooru Mathura Pakkam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என் ஊரு மதுர பக்கம்…
என் பாட்டு மனசில் நிக்கும்…
நான் பாடும் நேரம் ராப்போதுதான்…

ஆண் : நீர் தூங்கும் நிலமும் தூங்கும்…
ஆகாய நிலவும் தூங்கும்…
நான் தூங்கமாட்டேன் ராக்கோழிதான்…

ஆண் : என்னோடு நூலும் இல்ல…
பின்னோடு வாலும் இல்ல…
என்னோடு நூலும் இல்ல…
பின்னோடு வாலும் இல்ல…
காத்தோடு போகும் காத்தாடி நான்…

ஆண் : என் ஊரு மதுர பக்கம்…
என் பாட்டு மனசில் நிக்கும்…
நான் பாடும் நேரம் ராப்போதுதான்…

—BGM—

ஆண் : யாராரோ ஆசைப்பட்டா சேத்துவைக்கும் அன்னக்கிளியே…
உன் வாழ்க்கை என்ன ஆச்சு நான் கேக்குறேன்…
ஊரார ஏத்தி விட்டு ஏணி நிக்கும் தன்னந்தனியே…
அதைப்போல உன்னத்தானே நான் பார்க்குறேன்…

ஆண் : விதியோடு மோது அடி தங்கச்சி…
குடிகாரன் அண்ணன் இவன் உன் கட்சி…
பாட்டால சோகம் தீரும் அதனால பாடுறேன்…

ஆண் : என் ஊரு மதுர பக்கம்…
என் பாட்டு மனசில் நிக்கும்…
நான் பாடும் நேரம் ராப்போதுதான்…

—BGM—

ஆண் : எல்லோர்க்கும் வாழ்க்கை இங்கே…
எண்ணம் போல வாய்க்காதம்மா…
வாய்க்காட்டி விட்டுத்தள்ளு ஏன் ஏங்கணும்…

ஆண் : வந்தாரை வரவில் வைப்போம்…
விட்டுப்போனா செலவில் வைப்போம்…
வேண்டாத பாரம் எல்லாம் ஏன் தாங்கணும்…

ஆண் : பூ பூத்ததெல்லாம் காயாகுதா…
காயானதெல்லாம் கனியாகுதா…
இதுக்காக வாடலாமா அதனால பாடுறேன்…

ஆண் : என் ஊரு மதுர பக்கம்…
என் பாட்டு மனசில் நிக்கும்…
நான் பாடும் நேரம் ராப்போதுதான்…

ஆண் : நீர் தூங்கும் நிலமும் தூங்கும்…
ஆகாய நிலவும் தூங்கும்…
நான் தூங்கமாட்டேன் ராக்கோழிதான்…

ஆண் : என்னோடு நூலும் இல்ல…
பின்னோடு வாலும் இல்ல…
என்னோடு நூலும் இல்ல…
பின்னோடு வாலும் இல்ல…
காத்தோடு போகும் காத்தாடி நான்…

ஆண் : என் ஊரு மதுர பக்கம்…
என் பாட்டு மனசில் நிக்கும்…
நான் பாடும் நேரம் ராப்போதுதான்…

ஆண் : நீர் தூங்கும் நிலமும் தூங்கும்…
ஆகாய நிலவும் தூங்கும்…
நான் தூங்கமாட்டேன் ராக்கோழிதான்…


Notes : En Ooru Mathura Pakkam Song Lyrics in Tamil. This Song from Vasalil Oru Vennila (1991). Song Lyrics penned by Vaali. என் ஊரு மதுர பக்கம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading