இளங்காத்து வீசுதே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஸ்ரீராம் பார்த்தசாரதி & ஸ்ரேயா கோஷல்இளையராஜாபிதாமகன்

Elangaathu Veesudhey Song Lyrics in Tamil


BGM

ஆண் : இளங்காத்து வீசுதே…
இசை போல பேசுதே…

BGM

ஆண் : இளங்காத்து வீசுதே…
இசை போல பேசுதே…
வளையாத மூங்கிலில்…
ராகம் வளைஞ்சு ஓடுதே…
மேகம் முழிச்சு கேக்குதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கரும்பாறை மனசுல…
மயில் தோகை விரிக்குதே…
மழைச்சாரல் தெரிக்குதே…
புல்வெளி பாதை விரிக்குதே…
வானவில் குடையும் புடிக்குதே…
புல்வெளி பாதை விரிக்குதே…
வானவில் குடையும் புடிக்குதே…

ஆண் : மணியின் ஓசை கேட்டு…
மனக்கதவு திறக்குதே…
புதிய தாளம் போட்டு…
உடல் காற்றில் மிதக்குதே…

ஆண் : இளங்காத்து வீசுதே…
இசை போல பேசுதே…

பெண் : வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே…
மேகம் முழிச்சு கேக்குதே…

BGM

பெண் : பின்னிப் பின்னிச் சின்ன இழையோடும்…
நெஞ்சை அள்ளும் வண்ணத்துணி போல…
ஒன்னுக்கொன்னு தான் இணைஞ்சி இருக்கு…
உறவு எல்லாம் அமைஞ்சி இருக்கு…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அள்ளி அள்ளித் தந்து உறவாடும்…
அன்னமடி இந்த நிலம் போல…
சிலருக்குத்தான் மனசு இருக்கு…
உலகம் அதில் நிலைச்சு இருக்கு…

ஆண் : நேத்து தனிமையில போச்சு…
யாரும் துணை இல்ல…
யாரோ வழித்துணைக்கு வந்தால்…
ஏதும் இணை இல்லை…

பெண் : உலகத்தில் எதுவும்…
தனிச்சு இல்லையே…
குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல…

ஆண் : இளங்காத்து வீசுதே…
இசை போல பேசுதே…

பெண் : வளையாத மூங்கிலில்…
ராகம் வளைஞ்சு ஓடுதே…
மேகம் முழிச்சு கேக்குதே…

BGM

ஆண் : ஓ… மனசுல என்ன ஆகாயம்…
தினம்தினம் அது புதிர் போடும்…
ரகசியத்தை யாரு அறிஞ்சா…
அதிசயத்தை யாரு புரிஞ்சா…

பெண் : விதை விதைக்கிற கைதானே…
மலர் பறிக்குது தினம்தோறும்…
மலர் தொடுக்க நாரை எடுத்து…
யார் தொடுத்தா மாலையாச்சு…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஆலம் விழுதிலே ஊஞ்சல்…
ஆடும் கிளி எல்லாம்…
மூடும் சிறகிலே மெல்ல பேசும் கதை எல்லாம்…
தாலாட்டு கேட்டிடாமலே…
தாயின் மடியைத்தேடி ஓடும் மலைநதி போல…

பெண் : கரும்பாறை மனசுல…
மயில் தோகை விரிக்குதே…
மழைச்சாரல் தெரிக்குதே…
புல்வெளி பாதை விரிக்குதே…

ஆண் : வானவில் குடையும் புடிக்குதே…
புல்வெளி பாதை விரிக்குதே…
வானவில் குடையும் புடிக்குதே…

ஆண் : மணியின் ஓசை கேட்டு…
மனக்கதவு திறக்குதே…

பெண் : புதிய தாளம் போட்டு…
உடல் காற்றில் மிதக்குதே…

BGM


Notes : Elangaathu Veesudhey Song Lyrics in Tamil. This Song from Pithamagan (2003). Song Lyrics penned by Pazhani Bharathi. இளங்காத்து வீசுதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading