இதழ் ஓரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ்.சித்ராதேவாசின்ன முத்து

Edhazh Oram Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : இதழ் ஓரம் தொட்டு வைப்பது சுகமா…
குழு : அது சுகமா…

—BGM—

பெண் : நுனி நாவில் பொட்டு வைப்பது சுகமா…
குழு : அது சுகமா…

—BGM—

ஆண் : கண்கள் துடிப்பதும் ஒரு சுகமா…
கைகள் அணைப்பதும் ஒரு சுகமா…

பெண் : தனிமையில் ஒரு சுகம்…
தலையணை ஒரு சுகம்…
தழுவுதல் ஒரு சுகமா சுகமா…

—BGM—

ஆண் : முத்தாடும் பொழுதினிலே…
நீ முகம் கொடுத்தால் அது சுகமா…
அத்தானும் அருகிருக்க…
நீ நகம் கடித்தால் அது சுகமா…

—BGM—

பெண் : குற்றாலக் கரைதனிலே…
ஒரு குளிர் எடுத்தால் அது சுகமா…
கண்ணாளன் கைகளிலே…
அந்த கதகதப்பே ஒரு சுகமா…

ஆண் : எடுத்ததை கொடுத்திடு…
எடுத்ததை கொடுத்திடு இது என்ன நியாயமா…
அடுத்ததை நடத்திட அதிகாரம் வேணுமா…

பெண் : கனிப்பது ஒரு சுகம்…
அணைப்பது ஒரு சுகம்…
நினைப்பது ஒரு சுகமா சுகமா…

—BGM—

பெண் : மாந்தோப்பு ஊஞ்சலிலே…
எனை தள்ளுவது ஒரு சுகமா…
நீ தள்ளும் வேளையிலே…
எனை கிள்ளுவதும் ஒரு சுகமா…

—BGM—

ஆண் : முந்தானை வந்து வந்து…
எனை மோதுவதும் ஒரு சுகமா…
முன்னேறும் வேளையிலே…
உன் மூச்சு சுடும் அது சுகமா…

பெண் : வெற்றிக்கொடி நாட்டினாய்… ஆஆ…
வெற்றிக்கொடி நாட்டினாய்…
விருந்தென்ன வேண்டும்மா…
சுற்றி சுற்றி பார்க்கிறாய்…
சுகம் கேட்கும் நேரமா…

ஆண் : தொட தொட துடிப்பதும்…
சுட சுட ரசிப்பதும்…
இளமைக்கு ஒரு சுகமா சுகமா…

—BGM—

பெண் : இதழ் ஓரம் தொட்டு வைப்பது சுகமா சுகமா…
குழு : அது சுகமா…
பெண் : சுகமா…

ஆண் : நுனி நாவில் பொட்டு வைப்பது சுகமா சுகமா…
குழு : அது சுகமா…
ஆண் : சுகமா…

பெண் : கண்கள் துடிப்பதும் ஒரு சுகமா…
கைகள் அணைப்பதும் ஒரு சுகமா…

ஆண் : தனிமையில் ஒரு சுகம்…
தலையணை ஒரு சுகம்…
தழுவுதல் ஒரு சுகமா சுகமா…

ஆண் : சுகமா…
பெண் : சுகமா…
ஆண் : சுகமா…
ஆண் & பெண் :சுகமா… ஆ…


Notes : Edhazh Oram Song Lyrics in Tamil. This Song from Chinna Muthu (1994). Song Lyrics penned by Vairamuthu. இதழ் ஓரம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading