Category Archives: ஜாங்கிரி

ஜாங்கிரி – Jhangri (2017)

தூக்கி எறிஞ்சிட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பீனிக்ஸ் தாசன்ஜிடிஷ், டயானா தாரா & பிரியாஜிடிஷ்ஜாங்கிரி

Thooki Erinjittu Song Lyrics in Tamil


BGM

ஆண் : தூக்கி எறிஞ்சிட்டு போறா போறா காதலை…
உசுர எடுக்கிறா போதும் இந்த வேதனை…

ஆண் : துண்டா நானும் உடையுறேன்…
நீயும் சொன்ன வார்த்தையால்…
பெண்ணே உன்ன நெனச்சுதான்…
வாழ்கைய எங்கோ தொலைக்குறேன்…

ஆண் : ஹே… காதல் எல்லாம் மாயமா…
துளி கண்ணீர் மட்டும் மிஞ்சுமா…
விதி என்று சொல்லி மறக்கவா…
அந்த காதலை மொத்தமா வெறுக்கவா…

ஆண் : உன்னை துன்பத்தில் தள்ளி ரசித்தவன்…
இங்கே இன்பமாய் துள்ளி குதிக்கிறான்…
அடி அன்பாக நீயும்…
நன்றாக வாழ எல்லாமே செய்தேனே…

ஆண் : பெண்ணே மோதல் இல்லா காதல் தான்…
இந்த உலகில் எங்கும் இல்லையே…
மனம் ஒண்ணா ரெண்டும் சேர்ந்திட்டா…
அது போலே காதல் இல்லையே…

ஆண் : அடி சொந்தங்கள் உன்னை மறக்கலாம்…
உன் சோகங்கள் கண்டு சிரிக்கலாம்…
ஆனால் உன்னை நான் என்றும்…
என் நெஞ்சில் வைப்பேன் என் அன்பு மாறாதே…

ஆண் : உனக்காக நானும் இருக்கிறேன்…
மறுக்காதே என்னை நம்பிடு…
மனசெல்லாம் நீயே நிற்கிறாய்…
உன் இதயம் கொஞ்சம் தந்திடு…

BGM

ஆண் : தூக்கி எறிஞ்சிட்டு போறா போறா காதலை…
தனியா நடக்குறேன் கால்கள் போகும் பாதையில்…

BGM

ஆண் : எதிர் பார்த்த கண்ணில்தான்…
சில நீர் துளி பூக்கிறதே…
வலியோடு அன்பே நான்…
வீதியில் அலைகிறேன்…

ஆண் : விடை இல்லா கேள்வி போல்…
என் காதலும் இருக்கிறதே…
ஒரு வார்த்தை சொன்னாலும்…
என் வாழ்கையும் பிழைதிடுமே…

ஆண் : நில்லு சொல்லாமல் போகாதே…
என் கண்ணீரும் தீராதே…
உன்னை நான் பார்க்காமல்…
மனம் முள்ளாக மாறிடுதே…

ஆண் : உன்னை துன்பத்தில் தள்ளி ரசித்தவன்…
இங்கே இன்பமாய் துள்ளி குதிக்கிறான்…
அடி அன்பாக நீயும்…
நன்றாக வாழ எல்லாமே செய்தேனே…

ஆண் : அடி சொந்தங்கள் உன்னை மறக்கலாம்…
உன் சோகங்கள் கண்டு சிரிக்கலாம்…
ஆனால் உன்னை நான் என்றும்…
என் நெஞ்சில் வைப்பேன் என் அன்பு மாறாதே…

BGM

பெண் : வேண்டாம் காதலே…
போதும் போதும் போய் விடு…
மீண்டும் ஒரு முறை…
வேண்டாம் அந்த வேதனை…

பெண் : ஒரு காதல் காயம் ஆறும் முன்…
மறு காதல் என்னை கேக்குதே…
எனக்காக எதையும் செய்யவே…
அவன் நெஞ்சம் எல்லாம் துடிக்குதே…

பெண் : நான் ஆசை எல்லாம் வெறுக்கிறேன்…
மண வாழ்கை சிறையில் தவிக்கிறேன்…
உனக்காக என்னை மாற்றவே…
என் மனசில் இடமும் இல்லையே…

ஆண் : உன்னை துன்பத்தில் தள்ளி ரசித்தவன்…
இங்கே இன்பமாய் துள்ளி குதிக்கிறான்…
அடி அன்பாக நீயும்…
நன்றாக வாழ எல்லாமே செய்தேனே…

ஆண் : பெண்ணே மோதல் இல்லா காதல்தான்…
இந்த உலகில் எங்கும் இல்லையே…
மனம் ஒண்ணா ரெண்டும் சேர்ந்திட்டா…
அது போலே காதல் இல்லையே…

ஆண் : உனக்காக நானும் இருக்கிறேன்…
மறுக்காதே என்னை நம்பிடு…
மனசெல்லாம் நீயே நிற்கிறாய்…
உன் இதயம் கொஞ்சம் தந்திடு…

BGM


Notes : Thooki Erinjittu Song Lyrics in Tamil. This Song from Jhangri (2017). Song Lyrics penned by Phoenix Dassan. தூக்கி எறிஞ்சிட்டு பாடல் வரிகள்.