Category Archives: சைவம்

Azhagu Song Lyrics in Tamil

அழகு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்உத்தாரா உன்னிகிருஷ்ணன்ஜி.வி. பிரகாஷ் குமார்சைவம்

Azhagu Song Lyrics in Tamil


BGM

பெண் : அழகே அழகே எதுவும் அழகே…
அன்பின் விழியில் எல்லாம் அழகே…

பெண் : மழை மட்டுமா அழகு…
சுடும் வெயில் கூட ஒரு அழகு…
மலர் மட்டுமா அழகு…
விழும் இலை கூட ஒரு அழகு…

பெண் : புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு…
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு…
நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு…
உண்மை அதுதான் மெய்யாய் அழகு…

BGM

பெண் : குயில் இசை அது பாடிட…
ஸ்வர வரிசைகள் தேவையா…
மயில் நடனங்கள் ஆடிட…
ஜதி ஒலிகளும் தேவையா…

பெண் : நதி நடந்து சென்றிட…
வழி துணை தான் தேவையா…
கடல் அலை அது பேசிட…
மொழி இலக்கணம் தேவையா…

பெண் : இயற்கையோடு இணைந்தால்…
உலகம் முழுதும் அழகு…
கவலை யாவும் மறந்தால்…
இந்த வாழ்க்கை முழுதும் அழகு…

BGM

பெண் : அழகே அழகே எதுவும் அழகே…

BGM

பெண் : இதயம் ஒரு ஊஞ்சலே…
இடம் வலம் அது ஆடிடும்…
இன்பத்தில் அது தோய்ந்திடும்…
துன்பத்தில் அது மூழ்கிடும்…

பெண் : நடந்ததை நாம் நாளுமே…
நினைப்பதில் பொருள் இல்லையே…
நடப்பதை நாம் எண்ணினால்…
அதைவிட உயர்வில்லையே…

பெண் : பூக்கும் பூவில் வீசும்…
வாசம் என்ன அழகு…
அதையும் தாண்டி வீசும்…
நம் நேசம் ரொம்ப அழகு…

BGM

பெண் : அழகே அழகே எதுவும் அழகே…
அன்பின் விழியில் எல்லாம் அழகே…

பெண் : மழை மட்டுமா அழகு…
சுடும் வெயில் கூட ஒரு அழகு…
மலர் மட்டுமா அழகு…
விழும் இலை கூட ஒரு அழகு…

பெண் : புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு…
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு…
நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு…
உண்மை அதுதான் மெய்யாய் அழகு…

BGM


Notes : Azhagu Song Lyrics in Tamil. This Song from Saivam (2014). Song Lyrics penned by Na. Muthukumar. அழகு பாடல் வரிகள்.