Category Archives: முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு

முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு – Muniyandi Vilangial Moonramandu (2008)

கட்டிப்பிடிக்கும் கரடிய

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஜெயமூர்த்தி & மாலதிவித்யாசாகர்முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு

Kattipidikkum Karadiya Song Lyrics in Tamil


ஆண் : கட்டிப் பிடிக்கும் கரடிய நம்புங்க…
எட்டி மிதிக்கும் யானைய நம்புங்க…
ஸ்டிக்கர் பொட்டுக்காரிகள நம்பாதீங்க…
அப்புறம் சீரழிஞ்சு பிஞ்சிலேயே வெம்பாதீங்க…

ஆண் : கண்ணால காதல் கொடுப்பா…
ஒரு நேரம் வந்தா காதலுக்கே கடுக்கா கொடுப்பா…
முந்தான தந்தியடிப்பா…
நீ கிட்ட வந்தா மூஞ்சியிலே எட்டியுதைப்பா…

பெண் : ஒட்டிக் கெடக்கும் செங்கல நம்புங்க…
குட்டி சுவைத்து கூரைய நம்புங்க…
கட்சி மாறும் ஆம்புளைய நம்பாதீங்க…
பிறகு கத்திரியில் வெம்பாதீங்க…

பெண் : சீனிமிட்டாய் வாங்கிக் கொடுப்பான்…
கத முடிச்சதுமே சீமத்தண்ணி ஊத்தியடிப்பான்…
ராமனப் போல் நல்லா நடிப்பான்…
உன்ன ஒறங்கவிட்டு காமனுக்கு தந்தியடிப்பான்…

BGM

ஆண் : கொளத்துல மீனிருந்தா கொத்தவரும் கொக்கு வரும்…
வெக்கயில தண்ணி கொறஞ்சா…
கொளத்த மாத்தி றெக்கையடிக்கும்…

ஆண் : பொம்பளையும் கொக்கு…
இதப் புரிஞ்சுக்காதவன் மக்கு…
பொம்பளையும் கொக்கு…
இதப் புரிஞ்சுக்காதவன் மக்கு…

BGM

பெண் : பொட்டிபணம் உள்ளவரைக்கும்…
பொம்பளயக் காலப்பிடிப்பான்…
ரொக்கமுள்ள முண்டச்சி கண்டா…
வெக்கம் விட்டு சீலத் துவைப்பான்…

பெண் : ஆம்பளதான் பொறுக்கி…
இத அறியாதவ சிறுக்கி…
ஆம்பளதான் பொறுக்கி…
இத அறியாதவ சிறுக்கி…

ஆண் : சத்தியமும் செஞ்சு கொடுப்பா…
சமயம் பாத்து சாமத்துல கழுத்த அறுப்பா…
சட்டிப்பானை எல்லாம் மறைப்பா…
ஒன்ன உறங்கவிட்டு தாந்தின்னியா தின்னு தீர்ப்பா…

பெண் : ஒட்டிக் கெடக்கும் செங்கல நம்புங்க…
குட்டி சுவைத்து கூரைய நம்புங்க…

BGM

பெண் : தாலி தந்த பொம்பளையோட…
தலகாணியில் ஒட்டிக் கெடப்பான்…
கோழி கூவும் சாமத்துல…
கொழுந்தியாளக் கட்டிப் பிடிப்பான்…

பெண் : கொரங்கு மனசுக்காரன்…
அவன் குடிகெடுப்பதில் சூரன்…
கொரங்கு மனசுக்காரன்…
அவன் குடிகெடுப்பதில் சூரன்…

BGM

ஆண் : கடலெல்லாம் பொங்கி வரட்டும்…
காதல் மட்டும் மூழ்காதப்பா…
பெத்தவுங்க கண்ணீர் சொட்டில்…
மொத்தத்தையும் மூழ்கடிப்பா…

ஆண் : பெரிய நடிப்புக்காரி…
அவ பேச்சில்லாத லாரி…
பெரிய நடிப்புக்காரி…
அவ பேச்சில்லாத லாரி…

பெண் : ஆம்பளைக்கு வருத்தமெல்லாம்…
அவன் மண்டையில அடுத்து ஒருத்தி வரும்வரைக்கும்
பொம்பளைக்கு வருத்தமெல்லாம்…
இந்த மண்ணவிட்டு போகுற காலம்வரைக்கும்…

ஆண் : கட்டிப் பிடிக்கும் கரடிய நம்புங்க…
பெண் : ஒட்டிக் கெடக்கும் செங்கல நம்புங்க…
ஆண் : ஸ்டிக்கர் பொட்டுக்காரிகள நம்பாதீங்க…
அப்புறம் சீரழிஞ்சு பிஞ்சிலேயே வெம்பாதீங்க…

ஆண் : கண்ணால காதல் கொடுப்பா…
ஒரு நேரம் வந்தா காதலுக்கே கடுக்கா கொடுப்பா…
முந்தான தந்தியடிப்பா…
நீ கிட்ட வந்தா மூஞ்சியிலே எட்டியுதைப்பா…


Notes : Kattipidikkum Karadiya Song Lyrics in Tamil. This Song from Muniyandi Vilangial Moonramandu (2008). Song Lyrics penned by Vairamuthu. கட்டிப்பிடிக்கும் கரடிய பாடல் வரிகள்.