Category Archives: சக்கரை தேவன்

சக்கரை தேவன் – Sakkarai Devan (1993)

மஞ்சள் பூசும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகிஇளையராஜாசக்கரை தேவன்

Manjal Poosum Manjal Poosum Song Lyrics in Tamil


BGM

ஆண் : மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும்…
வஞ்சிப் பூங்கொடி…
கொஞ்சிப் பேசி கொஞ்சிப் பேசி…
கொஞ்சும் பைங்கிளி…

ஆண் : வாசப் பூவின் தேனே…
வண்ண நிலாவே மானே…
காவல் ஏது கட்டுக்கள் ஏது…
காட்டாறு பாயும் போது…

ஆண் : மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும்…
வஞ்சிப் பூங்கொடி…
கொஞ்சிப் பேசி கொஞ்சிப் பேசி…
கொஞ்சும் பைங்கிளி…

BGM

பெண் : நீ இல்லாது நித்திரை ஏது…
பாயில் வாடும் பைங்கிளி…
நீ இருந்தால் சித்திரை கூட…
வாடை வீசும் மார்கழி…

ஆண் : நீ இல்லாது நித்திரை ஏது…
பாயில் வாடும் பைங்கிளி…
நீ இருந்தால் சித்திரை கூட…
வாடை வீசும் மார்கழி…

பெண் : மாதம் தேதி பார்த்து காதல் பூக்காது…
நீரை மீனும் சேர ஊரை கேட்காது…

ஆண் : பருவ ராகம் பாட…
புதிய கோலம் போட…
ஆதி அந்தம் அனைத்தும் சொந்தம்…
நீங்காது கூடும்போது…

பெண் : மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும்…
வஞ்சிப் பூங்கொடி…
கொஞ்சிப் பேசி கொஞ்சிப் பேசி…
கொஞ்சும் பைங்கிளி…

பெண் : வாசப் பூவின் தேனே…
வண்ண நிலாவே மானே…
காவல் ஏது கட்டுக்கள் ஏது…
காட்டாறு பாயும் போது…

பெண் : மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும்…
வஞ்சிப் பூங்கொடி…

BGM

ஆண் : நாலு பேர்கள் கண் படக்கூடும்…
நீயும் நானும் கூடினால்…
ராஜ யோகம் கை வரும் இன்று…
தோளில் தோகை ஆடினால்…

பெண் : நாலு பேர்கள் கண் படக்கூடும்…
நீயும் நானும் கூடினால்…
ராஜ யோகம் கை வரும் இன்று…
தோளில் தோகை ஆடினால்…

ஆண் : தேவன் எந்தன் ஜீவன்…
தேவி உன்னோடு…
மானின் கால்கள் போகும்…
மாமன் பின்னோடு…

பெண் : வாழும் நாட்கள் யாவும்…
உன்னுடன் வாழ வேண்டும்…
சொந்தம் என்று பந்தங்கள் என்று…
நீயின்றி யாரும் இல்லை…

ஆண் : மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும்…
வஞ்சிப் பூங்கொடி…

பெண் : கொஞ்சிப் பேசி கொஞ்சிப் பேசி…
கொஞ்சும் பைங்கிளி…

ஆண் : வாசப் பூவின் தேனே…
வண்ண நிலாவே மானே…

பெண் : காவல் ஏது கட்டுக்கள் ஏது…
காட்டாறு பாயும் போது…

பெண் : மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும்…
வஞ்சிப் பூங்கொடி…

ஆண் : கொஞ்சிப் பேசி கொஞ்சிப் பேசி…
கொஞ்சும் பைங்கிளி…


Notes : Manjal Poosum Manjal Poosum Song Lyrics in Tamil. This Song from Sakkarai Devan (1993). Song Lyrics penned by Vaali. மஞ்சள் பூசும் பாடல் வரிகள்.