Category Archives: அன்புள்ள தங்கச்சிக்கு

அன்புள்ள தங்கச்சிக்கு – Anbulla Thangachikku (1991)

ஊரும் தூங்க

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
Unknownஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & பி.எஸ். சசிரேகாஎஸ்.ஏ. ராஜ்குமார்அன்புள்ள தங்கச்சிக்கு

Oorum Thoonga Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஊரும் தூங்க ஊரார் தூங்க…
நானும் தூங்கலையே…
நீரும் தூங்க மீனும் தூங்க…
நெஞ்சம் தூங்கலையே…

பெண் : காணாமல் கண் தூங்குமா…
கைசேர நாளாகுமா…
விதை போட்டு விளைஞ்ச பயிரு…
வீணா போய்விடுமா… ஆஆஆ…

பெண் : ஊரும் தூங்க ஊரார் தூங்க…
நானும் தூங்கலையே…

BGM

ஆண் : உம்மேல உசுர வச்சு…
ஊரோடு பகையவச்சு…
நானும் திரிஞ்சேன்…
நாலாக் கிழிஞ்சேன்…

ஆண் : அன்னாந்தா நெலவிருக்கு…
அடி நெஞ்சில் நெருப் பிருக்கு…
ஒத்தக்கிளியா சுத்திப் பறந்தேன்…

ஆண் : பாய் போட்டா தூக்கம் வரல…
உன் ஏக்கம் விடல நீ பக்கம் வரல…
வான்நிலவும் உதிரும்…
வைகரையும் இருளும்…
ஓன் நெனப்பு மனசவிட்டு என்றும் போகாது…

ஆண் : ஊரும் தூங்க ஊரார் தூங்க…
நானும் தூங்கலையே…

BGM

பெண் : நீதான் என் ராசனுன்னு…
நானாக தெரிஞ்ச பின்னே…
ஏனோ பிரிஞ்சேன்…
நூலா திரிஞ்சேன்… ஏ…

பெண் : உன்னோட மூச்சிருக்கு…
யாரோட பேச்சிருக்கு…
மாமன் நெனப்பு சோறு எனக்கு…

பெண் : என்னோட அப்பன் கணக்கு…
தப்பு கணக்கு நான் இப்ப உனக்கு…
மாமனுக்கே மலர்ந்தேன்…
யார் தடுத்தும் மணப்பேன்…
காத்து பட்டா கல்லும் கரையும் காதல் கரையாது…

பெண் : ஊரும் தூங்க ஊரார் தூங்க…
நானும் தூங்கலையே…
நீரும் தூங்க மீனும் தூங்க…
நெஞ்சம் தூங்கலையே…

ஆண் : காணாமல் கண் தூங்குமா…
கைசேர நாளாகுமா…
விதை போட்டு விளைஞ்ச பயிரு…
வீணா போய்விடுமா…ஆஆஆ…

பெண் : ஊரும் தூங்க ஊரார் தூங்க…
நானும் தூங்கலையே…

ஆண் : நீரும் தூங்க மீனும் தூங்க…
நெஞ்சம் தூங்கலையே…


Notes : Oorum Thoonga Song Lyrics in Tamil. This Song from Anbulla Thangachikku (1991). Song Lyrics penned by Unknown. ஊரும் தூங்க பாடல் வரிகள்.