Category Archives: அகத்தியர்

அகத்தியர் – Agathiyar (1972)

தாயிற் சிறந்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பூவை செங்குட்டுவன்டி.கே. கலாகுன்னக்குடி வைத்தியநாதன்அகத்தியர்

Thaayir Chirantha Song Lyrics in Tamil


BGM

பெண் : தாயிற் சிறந்த கோவிலுமில்லை…
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை…
ஆயிரம் உறவில் பெருமைகளில்லை…
அன்னை தந்தையே அன்பின் எல்லை…

பெண் : தாயிற் சிறந்த கோவிலுமில்லை…
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை…
ஆயிரம் உறவில் பெருமைகளில்லை…
அன்னை தந்தையே அன்பின் எல்லை…

பெண் : தாயிற் சிறந்த கோவிலுமில்லை…
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை…

BGM

பெண் : தன்னலமற்றது தாயின் நெஞ்சம்…
தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்…
தன்னலமற்றது தாயின் நெஞ்சம்…
தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்…

பெண் : மன்னுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்…
மன்னுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்…
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்…

BGM

பெண் : தாயிற் சிறந்த கோவிலுமில்லை…
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை…

BGM

பெண் : பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு…
பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு…
பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு…
பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு…

பெண் : கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று…
கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று…
கருணையில் தாயும் கடவுளும் ஒன்று…

பெண் : தாயிற் சிறந்த கோவிலுமில்லை…
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை…
ஆயிரம் உறவில் பெருமைகளில்லை…
அன்னை தந்தையே அன்பின் எல்லை…

பெண் : தாயிற் சிறந்த கோவிலுமில்லை…
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை…


Notes : Thaayir Chirantha Song Lyrics in Tamil. This Song from Agathiyar (1972). Song Lyrics penned by Poovai Senguttuvan. தாயிற் சிறந்த பாடல் வரிகள்.