Category Archives: அகல்விளக்கு

அகல்விளக்கு – Agal Vilakku (1979)

ஏதோ நினைவுகள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கே.ஜே. யேசுதாஸ் & எஸ்.பி. சைலஜாஇளையராஜாஅகல்விளக்கு

Yetho Ninaivugal Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே…
காவேரி ஊற்றாகவே…
காற்றோடு காற்றாகவே…
தினம் காண்பதுதான் ஏதோ…

பெண் : ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே…
காவேரி ஊற்றாகவே…
காற்றோடு காற்றாகவே…
தினம் காண்பதுதான் ஏதோ…

BGM

பெண் : மார்பினில் நானும் மாறாமல் சேரும்…
காலம்தான் வேண்டும்… ம்ம்ம்…
வான்வெளி எங்கும் என் காதல் கீதம்…
வாழும் நாள் வேண்டும்… ம்ம்ம்…

பெண் : தேவைகள் எல்லாம் தீராத நேரம்…
தேவன் நீ வேண்டும்… ம்ம்ம்…
சேரும் நாள் வேண்டும்… ம்ம்ம்…

ஆண் : ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே…
காவேரி ஊற்றாகவே…
காற்றோடு காற்றாகவே…

BGM

ஆண் : நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம்…
இன்பம் பேரின்பம்… ம்ம்ம்…
நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம்…
ஆஹா ஆனந்தம்… ம்ம்ம்…

ஆண் : காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம்…
ஏங்கும் எந்நாளும்… ம்ம்ம்…
ஏக்கம் உள்ளாடும்… ம்ம்ம்…

பெண் : ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே…
காவேரி ஊற்றாகவே…
காற்றோடு காற்றாகவே…
தினம் காண்பதுதான் ஏதோ…

ஆண் : நினைவுகள்…
பெண் : கனவுகள்…
ஆண் : மனதிலே…
பெண் : மலருதே…

ஆண் & பெண் : காவேரி ஊற்றாகவே…
காற்றோடு காற்றாகவே…


Notes : Yetho Ninaivugal Song Lyrics in Tamil. This Song from Agal Vilakku (1979). Song Lyrics penned by Gangai Amaran. ஏதோ நினைவுகள் பாடல் வரிகள்.