Category Archives: சிவந்த மண்

pattathu-rani-song-lyrics-in-tamil

பட்டத்து ராணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்L. R. ஈஸ்வரிஎம்.எஸ்.விஸ்வநாதன்சிவந்த மண்

Pattathu Rani Song Lyrics in Tamil


BGM

பெண் : பட்டத்து ராணி பார்க்கும் பார்வை…
வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும்…
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை…
வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும்…

பெண் : நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்…
சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்…
நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்…
சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்…

பெண் : பட்டத்து ராணி பார்க்கும் பார்வை…
வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும்…

BGM

பெண் : ஓ… முள்ளிலாடும் நெஞ்சம்…
கல்லில் ஊறும் கண்கள்…
தங்கத் தட்டில் பொங்கும்…
இன்பத் தேன் போல் பெண்கள்…

பெண் : ஓ… முள்ளிலாடும் நெஞ்சம்…
கல்லில் ஊறும் கண்கள்…
தங்கத் தட்டில் பொங்கும்…
இன்பத் தேன் போல் பெண்கள்…

பெண் : சாட்டை கொண்டு பாடச் சொன்னால்…
எங்கே பாடும் பாடல்…
தத்தித் தத்தி ஆடச் சொன்னால்…
எங்கே ஆடும் கால்கள்…

BGM

பெண் : துடித்து எழுந்ததே…
கொதித்து சிவந்ததே…
கதை முடிக்க நினைத்ததே…

பெண் : நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்…
சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்…

பெண் : பட்டத்து ராணி பார்க்கும் பார்வை…
வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும்…

BGM

பெண் : ஹோ… முத்தம் சிந்தும் முத்து…
முல்லை வண்ணச் சிட்டு…
மேடை கண்டு ஆடும் பெண்மை…
ரோஜா மொட்டு…

பெண் : வேட்டை ஆடும் மானுக்கென்ன…
வெட்கம் இந்தப் பக்கம்…
வெள்ளிப் பூவின் நெஞ்சில் மட்டும்…
திட்டம் உண்டு திட்டம்…

BGM

பெண் : துடித்து எழுந்ததே…
கொதித்து சிவந்ததே…
கதை முடிக்க நினைத்ததே…

பெண் : நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்…
சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்…

BGM

பெண் : நாடு கண்ட பூங்கொடி…
காடு வந்த காரணம்…
ஒரு முறை எண்ணிப்பார்…

பெண் : தேடி வந்த நாடகம்…
கூடி வரும் வேளையில்…
மறுபடி என்னைப்பார்…

பெண் : நாடு கண்ட பூங்கொடி…
காடு வந்த காரணம்…
ஒரு முறை எண்ணிப்பார்…

பெண் : தேடி வந்த நாடகம்…
கூடி வரும் வேளையில்…
மறுபடி என்னைப்பார்…

பெண் : வலை போட்டுப் பிடித்தாலும் கிடைக்காதது…

BGM

பெண் : துடித்து எழுந்ததே…
கொதித்து சிவந்ததே…
கதை முடிக்க நினைத்ததே…

பெண் : பட்டத்து ராணி பார்க்கும் பார்வை…
வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும்…


Notes : Pattathu Rani Song Lyrics in Tamil. This Song from Sivandha Mann (1969). Song Lyrics penned by Kannadasan. பட்டத்து ராணி பாடல் வரிகள்.