போதை கணமே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்அனிருத் ரவிசந்தர் & ஷாஷா திருப்பதிவிஷால் சந்திரசேகர்ஓ மணப்பெண்ணே

Bodhai Kaname Song Lyrics in Tamil


BGM

பெண் : அதோ பொன் பிறையா உடைந்திடும் நுரையா…

ஆண் : இதோ என் நொடியின் வழிப்பறியா…

பெண் : நாளும் கரையோடும் அலையோடும்…
உறவாடும் கிளிஞ்சல் போல்…
என் நெஞ்சம் நிலையின்றியா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அங்கே தொலை தூரத்தில் சாரல்…
மழை கண்டேன் நான் பக்கம்…
வரும்போது சிறை கம்பியா…

பெண் : தவறென பார்த்த கண் இன்று கலை செய்யுதே…

ஆண் : தரிசென பார்த்த மேகங்கள் கடல் பெய்யுதே…

ஆண் & பெண் : கண்கள் காரணம் தேடுதே…
உன்னை வந்து சேருதே…

ஆண் & குழு (பெண்கள்) : போதை கணமே கணமே போகாதிரு நீ…
போதை கணமே கணமே போகாதிரு நீ…
போதை கணமே கணமே வாழ்வாய் இரு நீ…
போதை கணமே சிறகாகிடு நீ…

ஆண் : ஆஆ… ஆஆ…

ஆண் & குழு (பெண்கள்) : நிஜமே நிஜமே நீங்காதிரு நீ…
தேனின் தினமே தினமே தேங்காதிரு நீ…
நாளை இனிமேல் அனலாய் மேலே விழுந்தால்…
போதை கணமே குடையாயிரு நீ…

ஆண் & குழு (பெண்கள்) : தொடாத பாதையோ…
கை வீசும் ஆசையோ…

BGM

ஆண் : நிறைவது என் ஓடையோ…
நிகழ்வது யாரின் கதையோ…
எனகென நீண்ட கிளையில் குயில் சேருதோ…

பெண் : மரகத பொன் வேலையோ…
மனதினில் யாழின் மழையோ…
இதமாய் என் காலையோ…

ஆண் : கனாவின் ஓராமாக…
இடாதா கோலமாக…

பெண் : மறைத்து வைத்த ஆசை…
கை காட்டுதே…

ஆண் : நெஞ்சோடு ஆழமாக…
சொல்லாமல் நீளமாக…

பெண் : சுவைத்திருந்த மௌனம்…
பொய் ஆகுதே…

ஆண் : இருவரி சேர்ந்து காற்றோடு குரலாகுதே…

பெண் : இருபதைத்தாண்டி எதுவோ என் விரலாகுதே…

ஆண் & பெண் : என்னத் தோராணம் ஏறுதே…
சேரும் பாலம் போலவே…

ஆண் & குழு (பெண்கள்) : போதை கணமே கணமே போகாதிரு நீ…
போதை கணமே கணமே போகாதிரு நீ…
போதை கணமே கணமே வாழ்வாய் இரு நீ…
போதை கணமே சிறகாகிடு நீ…

ஆண் : ஆஆ… ஆஆ…

ஆண் & குழு (பெண்கள்) : நிஜமே நிஜமே நீங்காதிரு நீ…
தேனின் தினமே தினமே தேங்காதிரு நீ…
நாளை இனிமேல் அனலாய் மேலே விழுந்தால்…
போதை கணமே குடையாய் இரு நீ…

குழு (பெண்கள்) : தொடாத பாதையோ…
கை வீசும் ஆசையோ…


Notes : Bodhai Kaname Song Lyrics in Tamil. This Song from Oh Manapenne (2021). Song Lyrics penned by Vivek. போதை கணமே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading