அழகிய கண்ணே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ். ஜானகிஇளையராஜாஉதிரிப்பூக்கள்

Azhagiya Kanne Song Lyrics in Tamil


BGM

பெண் : அழகிய கண்ணே உறவுகள் நீயே…
நீ எங்கே இனி நான் அங்கே…
என் சேய் அல்ல தாய் நீ…

பெண் : அழகிய கண்ணே உறவுகள் நீயே…

BGM

பெண் : சங்கம் காணாதது தமிழும் அல்ல…
தன்னை அறியாதவள் தாயுமல்ல…
சங்கம் காணாதது தமிழும் அல்ல…
தன்னை அறியாதவள் தாயுமல்ல…
என் வீட்டில் என்றும் சந்ரோதயம்…
நான் கண்டேன் வெள்ளி நிலா…

பெண் : அழகிய கண்ணே உறவுகள் நீயே…

BGM

பெண் : சொர்க்கம் எப்போதும் நம் கையிலே…
அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே…
சொர்க்கம் எப்போதும் நம் கையிலே…
அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே…
என் நெஞ்சம் என்றும் கண்ணாடிதான்…
என் தெய்வம் மாங்கல்யம்தான்…

பெண் : அழகிய கண்ணே உறவுகள் நீயே…

BGM

பெண் : மஞ்சள் என்றென்றும் நிலையானது…
மழை வந்தாலுமே கலையாதது…
மஞ்சள் என்றென்றும் நிலையானது…
மழை வந்தாலுமே கலையாதது…
நம் வீட்டில் என்றும் அலைமோதுது…
என் நெஞ்சம் அலையாதது…

பெண் : அழகிய கண்ணே உறவுகள் நீயே…
நீ எங்கே இனி நான் அங்கே…
என் சேய் அல்ல தாய் நீ…

பெண் : அழகிய கண்ணே உறவுகள் நீயே…


Notes : Azhagiya Kanne Song Lyrics in Tamil. This Song from Uthiripookkal (1979). Song Lyrics penned by Kannadasan. அழகிய கண்ணே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading