அயிர மீனு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்மனோ & சுவர்ணலதாதேவாமாப்பிள்ளை கவுண்டர்

Ayira Meenu Pidikka Song Lyrics in Tamil


—BGM—

பெண் : அயிர மீனு புடிக்கப் போனேன் ஆத்துல…
ஒரு ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல…
அயிர மீனு புடிக்கப் போனேன் ஆத்துல…
ஒரு ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல…

பெண் : கல்யாணத்த சொல்லிப்புட்டான் நேருல…
அவன் கல்யாணத்த சொல்லிப்புட்டான் நேருல…
என்னைக் கைப்புடிச்சுக் கொண்டாருவான் தேருல ஊருல…

பெண் : அயிர மீனு புடிக்கப் போனேன் ஆத்துல…
ஒரு ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல…

—BGM—

பெண் : ஆலமரம் அரசமரம் அத்தனையும் சாட்சி…
நீ அடுத்த மாசம் பாக்கப் போற கல்யாணக் காட்சி…

ஆண் : புர்ர் ரங்கு டக்குட்டு தக்கு தக்கு…
புர்ர்ர் ரங்கு டக்குட்டு தரிகிட தரிகிடதாம்…

பெண் : சேல கட்டாக் குருவிகளா நீங்க கூட வாங்க…
ஒரு சீர் செனத்தி எனக்காக எடுத்து வந்து தாங்க…

ஆண் : போட்டா சிவக்கும் புது வெத்தல…
என் பொண்டாட்டி தொட்டுத் தந்தா பத்தல…
நாள்தோறும் மல்லிகப்பூ மணக்கணும்…
நீ நாலாவது ஜாமத்திலும் முழிக்கணும்…

பெண் : அதுக்கு ஏத்திக்கட்டு இறுக்கிக்கட்டு…
எட்டு மொழ வேட்டிய…

ஆண் : அயிர மீனு புடிக்க வந்தா ஆத்துல…
இந்த ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல…

பெண் : அயிர மீனு புடிக்கப் போனேன் ஆத்துல…
ஒரு ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல…

—BGM—

ஆண் : ஹோய் ஹோய் ஹோய்…
கோட்டை கட்டி ஆளுகிற கோயம்புத்தூர் ராசா…
என்னைக் கூடிக்கூடி மயக்கிப்புட்டா குத்தால ரோசா…

—BGM—

பெண் : சாரல் வந்து தூறுதய்யா ஜன்னல நீ சாத்து…
ஒரு ஜாலியாக நடத்திக்கலாம் சம்சாரக் கூத்து…

ஆண் : ஓய் முத்தி வெளஞ்ச புது முந்திரி…
என் மூடக் கெளப்பிவிடும் சுந்தரி…

பெண் : ஒன்ன மடக்க வந்த வாப்பட்டி…
நான் உரசாமப் பத்திக்கிடும் தீப்பட்டி…

ஆண் : இனி காச்சு மூச்சு முத்தம்தான்…
கட்டில் காலு சத்தம்தான்…

பெண் : அயிரமீனு புடிக்கப் போனேன் ஆத்துல…
ஒரு ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல…

ஆண் : அயிர மீனு புடிக்கப் போனேன் ஆத்துல…
இந்த ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல…
கல்யாணத்த சொல்லிப்புட்டேன் நேருல…
நான் கல்யாணத்த சொல்லிப்புட்டேன் நேருல…
ஒன்னைக் கைப்புடிச்சுக் கொண்டாருவன் தேருல ஊருல…

பெண் : அயிர மீனு புடிக்கப் போனேன் ஆத்துல…
ஒரு ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல…

—BGM—


Notes : Ayira Meenu Pidikka Song Lyrics in Tamil. This Song from Mappillai Gounder (1997). Song Lyrics penned by Kalidasan. அயிர மீனு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading