அத்தன பேர் மத்தியில

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேத்தாயாசின் நிசார், வந்தனா ஸ்ரீனிவாசன்ஜஸ்டின் பிரபாகரன்இராவண கோட்டம்

Athana Per Mathiyila Song Lyrics in Tamil


பெண் : அத்தன பேர் மத்தியில…
பொத்துகிட்ட முத்தம் பட்டு…
குத்த வச்ச பொண்ணு ஒண்ணு உச்சி பூத்துருச்சே…

பெண் : கத்தும் மாடு கத்தயிலே…
மத்து சத்தம் மத்தியிலே…
ஒத்த முத்தம் உள்ள வந்து குட்டி போட்டுறிச்சே…

பெண் : கனக்கா சிரிக்கிறேன்…
எதுக்கோ ரசிக்கிறேன்…
ஊத்தான ஊத்துல ஒயிலா நனஞ்சேன்…

பெண் : புதுசா பிறக்குறேன்…
படுத்தே பறக்குறேன்…
கண்ணாடிய கிள்ளி கிள்ளி கிறுக்கா முழிக்குறேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அப்ப பாத்தது உன்ன…
கட்ட தாவணி புள்ள…
இப்ப பாக்குறேன் கண்ண…
ஏறுது ஏறுது பித்தம்…

ஆண் : கட்டிப்போடுது கண்ணு…
முட்டி போடுவது நெஞ்சு…
ஆச்சு வருஷங்கள் அஞ்சு…
சீறுது சீறுது நெஞ்சு…

ஆண் : எதையோ எதையோ செஞ்ச…
உள்ள ஆங்குது ஊங்குது…
இன்னும் தாங்குது தாங்குது நெஞ்சம்…

ஆண் : ஒருவாய் நெருப்ப ஓட்டிட்ட…
உள்ள தக தக தக…
தகக்குது சிலுக்குது…

ஆண் : வெகுநாள் வெறியே…
வெரசா அனையே…
கடவா உலகம் தொறந்துருச்சே…

ஆண் : பல நாள் திருடி…
உதட்ட திறடி…
என நான் தொலைச்சேன் எடுத்துக்கறேன்…

ஆண் : உதட்டான் குளத்துல…
பெரட்ட பிடிக்குறா…
சுழட்டி துவைக்குறா…
தலுக் மலுக் மலுக் மலுக்…

ஆண் : வறட்டி மனசுல…
மழையா விழுகுறா…
கலையா புழியுறா…
தாவணி காட்டுல வெள்ளம்…

பெண் : அத்தன பேர் மத்தியில…
பொத்துகிட்ட முத்தம் பட்டு…
குத்த வச்ச பொண்ணு ஒண்ணு உச்சி பூத்துருச்சே…

BGM

பெண் : ஊரணி தண்ணியில…

ஆண் : மீனு ரெண்டு…

பெண் : மாலைய மாத்திக்குச்சு…

ஆண் : கிட்ட நின்னு…

பெண் : ஆசையா பெத்துகிட்டு…
சுத்தி சுத்தி வருது…

ஆண் : சேதிய கூறடி கூறடி…
காட்டுக்குள்ள தும்பி ரெண்டு…

பெண் : பின்னிகிட்டு…

ஆண் : வானம் ஒண்ணு கட்டிகிச்சு…

பெண் : பேச்சிகிட்டு…

ஆண் : ஊரு கண்ணா ஏச்சிப்புட்டு…
முத்தி முத்தி விழுதே…

பெண் : பாதைய மூடிடு மூடிடு…

ஆண் : தொலைவா நானும் கிடந்தேன்…
சிறு தவக்கள தீண்டாத…
விண்மீன போல…

ஆண் : உனக்குள் இப்போ கரஞ்சேன்…
ஆடி உதிரத்தில் ஓடும்…
தாய்ப்பாலின் ஈரம் போல…

ஆண் : அழகா அதட்டுறா…
மெதுவா வெறட்டுறா…
நிலவ பொறட்டுறா…
திடுக் திடுக் திடுக்குன்னு…

ஆண் : வெயிலா தொரத்துறறா…
வெறப்பா ரசிக்குறா…
இனிப்பா இனிக்குறா…
கலுக் கலுக் கலுக் கலுக்…

ஆண் : அத்தன பேர் மத்தியில…
பொத்துகிட்ட முத்தம் பட்டு…
குத்த வெச்சா பொண்ணு ஒண்ணு உச்சி பூத்துருச்சே…

பெண் : கத்தும் மாடு கத்தயிலே…
மத்து சத்தம் மதியிலே…
ஒத்த முத்தம் உள்ள வந்து குட்டி போட்டுறிச்சே…

BGM

ஆண் : நாக்குல சொட்டுது…

பெண் : மௌனம் ஒன்னு…

ஆண் : பார்வையும் நிக்குது…

பெண் : வேணுமின்னு…

ஆண் : ஆசையும் முத்தத்துல…
பொத்தி வச்சு தார…

பெண் : வாங்கிடு வாங்கிடு வந்து…
வீட்டுக்குள்ள சுத்துது…

ஆண் : வெளிச்சம் ஒன்னு…

பெண் : வாசலில கத்துது…

ஆண் : மனசு நின்னு…

பெண் : ஊரு கண்ண பூட்டிப்புட்டு…
ரெண்டும் ரெக்கையில…

ஆண் : தாண்டுது தாண்டுது சென்று…

ஆண் : கொடுவா மேல பனியா…
இவ திடுக்குனு பாக்குற பார்வையே போதும்…
உனக்காக நானும் இறப்பேன்…
அடி புதைக்குற நேரம் முடியாத முத்தம்தாடி…

ஆண் : கதவோ திறக்குதே…
திறந்து…
மனசோ பறக்குதே…
பறந்து…
முழுசா பிறக்குதே…

ஆண் & பெண் : அதுவா நடக்குதே…
நடக்க எதுவோ இயக்குதே…
இயக்க பொதுவா நிலைக்குதே…

ஆண் & பெண் : காதலும் சாமியும் ஒன்னு…


Notes : Athana Per Mathiyila Song Lyrics in Tamil. This Song from Raavana Kottam (2023). Song Lyrics penned by Karthik Netha. அத்தன பேர் மத்தியில பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading