அடி தேனி சந்தையில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
லா.வரதன்அந்தோனி தாசன் & மீனாட்சி இளையராஜாஎன்.ஆர்.ரகுநந்தன்இடிமுழக்கம்

Adi Theni Sandhaiyil Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அடி தேனி சந்தையில்…
தேரு போல அசஞ்சு வந்தவளே…
எனக்குன்னு அமஞ்சு நின்னவளே…
காத்திரிக்கேன் வாடி பூங்குயிலே…

ஆண் : அடி மல்லிக பூவ கொண்டையில் சூட…
காத்து கிடக்கிறேன்டி…
கண்ணு ரெண்டும் பூத்து கிடக்கிறேன்டி…

பெண் : அட ஆண்டிப்பட்டியில்…
ஆணிபுடுங்க வந்த மகராசா…
அட நான் முள்ளிருக்கும் ரோசா…
எங்கிட்டே நீ தூக்க வேணாம் கூசா…

பெண் : இந்த கரட்டு பட்டி…
இந்த கரட்டு பட்டி கன்னிமயிலு…
உன் கையில் சிக்காது…
உன் குசும்பு எங்கிட்ட ஆகாது…

—BGM—

ஆண் : இந்த செவத்த பொம்பள…
பெருத்த கூட்டத்தில் ஆடுறத பாரு…
ஆட்டம் பாத்து சொக்கி நிக்குதூரு…
அடி உன் சொந்த பந்தம் யாரு…

ஆண் : அடி சிக்குன்னு உடம்பு பாக்குன்னு எனக்கு…
மோகம்தான் ஏறுதடி…
கிட்ட வந்தா உன் முகம் மாறுதடி…

பெண் : அட சும்மானாயிருக்கறேன் வம்பு வழக்குற…
வாயும் தான் கூசமா…
மூடிக்கிட்டு போடா நீ பேசாம…

பெண் : நான் பாத்தா பச்சபுள்ள…
பாஞ்சா கீரிபுள்ள…
படமும் தான் காட்டாதே…
உன் படம் என் தியேட்டரில் ஓடாதே…

—BGM—

ஆண் : அடி கோழி கொழம்பு போல…
நீயும் என இழுக்கிறியே…
கோபம் வந்தா கொத்திச்சு நிக்குறே…
வீரத்தில வெளஞ்சு நிக்குறியே…

ஆண் : நீ புலிய வெறட்டும் முரத்துக்காரி…
என வெறட்டுரியே…
முச்சந்தியில் என நிறுத்திரியே…
பக்கம் வந்தா எட்டி உதைக்கிறியே…

பெண் : உங்க வீர தீர மிடுக்குயெல்லாம்…
இப்போ உடச்சாச்சு…
ஒத்துங்கடா எங்களோட ஆட்சி…
எங்களுக்குப் பயம் விட்டு போச்சு…

பெண் : இந்த கரட்டு காட்டில்…
முளச்சு நல்லா படிச்சு வந்தாச்சு…
பல பல சாதன செஞ்சாச்சு…

பெண் : ஒரு வீட்டுக்குள் அடச்ச திமிர…
கள பறிச்சாச்சு…
கண்டம் விட்டு பறந்து போயாச்சு…

—BGM—

ஆண் : அடி தேனி சந்தையில்…
தேரு போல அசஞ்சு வந்தவளே…
எனக்குன்னு அமஞ்சு நின்னவளே…
காத்திரிக்கேன் வாடி பூங்குயிலே…

ஆண் : அடி மல்லிக பூவ கொண்டையில் சூட…
காத்து கிடக்கிறேன்டி…
கண்ணு ரெண்டும் பூத்து கிடக்கிறேன்டி…

பெண் : அட ஆண்டிப்பட்டியில்…
ஆணிபுடுங்க வந்த மகராசா…
அட நான் முள்ளிருக்கும் ரோசா…
எங்கிட்டே நீ தூக்க வேணாம் கூசா…

பெண் : இந்த கரட்டு பட்டி கன்னிமயிலு…
உன் கையில் சிக்காது…
உன் குசும்பு எங்கிட்ட ஆகாது…

—BGM—


Notes : Adi Theni Sandhaiyil Song Lyrics in Tamil. This Song from Idimuzhakkam (2024). Song Lyrics penned by La.Varadhan. அடி தேனி சந்தையில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading