அட புதியது

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன்இளையராஜாதேவர் மகன்

Ada Puthiyathu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அட புதியது பிறந்தது…
பழையது ஒதுங்குது…
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே…

ஆண் : அட பைத்தியம் தெளிஞ்சது…
வைத்தியம் பளிச்சது…
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே…

ஆண் : ஒண்ணாச்சு பாரு இதுவரை ரெண்டான ஊரு…
அண்ணாச்சி மூளை முடிச்சது பொன்னான வேலை…
அட வீராப்பும் பொல்லாப்பும் பொய்யா போச்சு அம்மம்மா…

குழு : அட புதியது பிறந்தது…
பழையது ஒதுங்குது…
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே…

குழு : அட பைத்தியம் தெளிஞ்சது…
வைத்தியம் பளிச்சது…
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே…

—BGM—

ஆண் : ஹேய்… கூடாம நம்மத்தான் கூரு கட்டி…
சிலர் கோளாறு செஞ்சாங்க வேலி கட்டி…
ஆத்தாடி அண்ணன்தான் தோளு தட்டி…
அதை சாய்ச்சாரு மண்ணுல வாளில் வெட்டி…

ஆண் : உள்ளத் துணிவு உள்ளவரு…
ஊருக்குதவும் நம்மவரு…

ஆண் : வாத்தியத்த தொட்டுத்தான்…
குழு : கொட்டுத்தான் கொட்டுத்தான்…
ஆண் : ஓசையெல்லாம் எட்டெட்டும்…
குழு : திக்கெட்டும் எட்டெட்டும்…

ஆண் : அடி அம்மாடி எல்லோரும்…
ஆட்டம் போடும் நாள்தானோ…

ஆண் : அட புதியது பிறந்தது…
பழையது ஒதுங்குது…
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே…

ஆண் : அட பைத்தியம் தெளிஞ்சது…
வைத்தியம் பளிச்சது…
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே…

ஆண் : ஒண்ணாச்சு பாரு இதுவரை ரெண்டான ஊரு…
அண்ணாச்சி மூளை முடிச்சது பொன்னான வேலை…
அட வீராப்பும் பொல்லாப்பும் பொய்யா போச்சு அம்மம்மா…

குழு : அட புதியது பிறந்தது…
பழையது ஒதுங்குது…
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே…

குழு : அட பைத்தியம் தெளிஞ்சது…
வைத்தியம் பளிச்சது…
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே…
ஆண் : ஹே ஹே…

குழு : அற்புதமா அதிசயமா பூத்திருக்கு…
முத்து நகை ரத்தினமா கெடைச்சிருக்கு…
நிச்சயமா நம் பெருமைகாத்திருக்கும்…
பத்திரமா சக்தியவ துணையிருப்பா…

—BGM—

ஆண் : மூவேந்தர் பேர் இட்ட சீமையடி…
நம்ம முப்பாட்டன் ஏர் விட்ட பூமியடி…
வெள்ளாடு சிங்கத்தை சாடுமடி…
இந்த வீரம் நம் மண்ணுக்கு சாட்சியடி…

ஆண் : மண்ணின் பெருமை காத்திடணும்…
அண்ணன் மொழியை கேட்டிடணும்…

ஆண் : ஓர் இனத்து மக்கள் தான்…
குழு : நாமெல்லாம் கண்ணம்மா…
ஆண் : ஓர் வயித்து பிள்ளைதான்…
குழு : எல்லோரும் பொன்னம்மா…

ஆண் : அடி அம்மாடி தெம்மாங்கு…
பாட்டு பாடும் நாள்தானோ

ஆண் : அட புதியது பிறந்தது…
பழையது ஒதுங்குது…
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே…

ஆண் : அட பைத்தியம் தெளிஞ்சது…
வைத்தியம் பளிச்சது…
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே…

ஆண் : ஒண்ணாச்சு பாரு இதுவரை ரெண்டான ஊரு…
ஹேய்… அண்ணாச்சி மூளை முடிச்சது பொன்னான வேலை…
அட வீராப்பும் பொல்லாப்பும் பொய்யா போச்சு அம்மம்மா…

குழு : அட புதியது பிறந்தது…
பழையது ஒதுங்குது…
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே…

குழு : அட பைத்தியம் தெளிஞ்சது…
வைத்தியம் பளிச்சது…
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமேஏய்…


Notes : Ada Puthiyathu Song Lyrics in Tamil. This Song from Thevar Magan (1992). Song Lyrics penned by Vaali. அட புதியது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading