ஆரவள்ளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையகம்பன்வேல்முருகன் & சின்ன பொண்ணுஸ்ரீகாந்த் தேவாஅவர்களும் இவர்களும்

Aaravalli Song Lyrics in Tamil


ஆண் : அடி ஆரவள்ளி என் சூரவள்ளி…

—BGM—

ஆண் : ஆரவள்ளி… சூரவள்ளி…
ஆட்டிபடைக்கும் அம்சவள்ளி…
என்ன தொவச்சி எடுக்க வந்தகள்ளி…

ஆண் : ஒன்னகண்டா துடிக்கிறேன்டி…
தெனமும் கவுந்து நான் படுக்குறேன்டி…
அடி நண்டா அலையுறேன்டி…
நெசமா நல்லவள தேடுறேன்டி…

பெண் : ஏ கொறலிவித்த பேச்சிக்காரா…
கொரங்கு சேட்ட கண்ணுக்காரா…
கொடுக்கா பல்லு மூக்குக்காரா…

பெண் : சும்மா மல்லுகட்டி நிக்காதடா…
என்ன மாங்காதின்ன வெக்காதடா…
சப்புகொட்டி சொக்காதடா…
என்ன தாலிகட்டி தூக்கிகோடா…

—BGM—

ஆண் : ஒத்த மல்லி கொண்டையில…
பூவா என்ன சுத்திக்கடி…
கொழந்தையா என்ன அள்ளி…
இடுப்புல வச்சிக்கடி…

ஆண் : கோவப்பழ ஓன் உதட்ட…
என் உதட்டில் தச்சிக்கடி…
உச்சந்தல கொதிக்கிதடி…
என் உள்ளங்கையும் நமிக்குதடி…

பெண் : ஒன்னுடைய தோளில நான்…
ஊஞ்சல் கட்டி ஆடிகிறேன்…
ஒன்னுடைய வேட்டிய நான்…
சாமத்துல மாட்டிகிறேன்…

பெண் : ஓன் மீச முடிய பின்னி…
மோதிரமா போட்டுக்கிறேன்…
மனசுதான் பதைக்குதடா…
ஏன் மாராப்பு வழுக்குதடா…

ஆண் : நெசாமா நீ கூட வந்தா…
அந்த நெலாவுக்கே கூட்டிபோவேன்…

பெண் : பக்கத்துல நீயிருந்தா…
நா எப்போதுமே சிரிச்சிருப்பேன்…

ஆண் : அடி ஒம்மேலதான்…
வெயில் பட்டா துடிச்சி நிப்பேன்…
சூரியன ஔிச்சி வெப்பேன்…

பெண் : ஒன்ன ஒத்த நொடி வெலகாம…
அனைச்சி நிப்பேன்…
சேலையில முடிஞ்சி வெப்பேன்…

ஆண் : ஆரவள்ளி… ஏய் சூரவள்ளி…

—BGM—

ஆண் : அடிவெள்ளிரிக்கா வெதபோல…
வௌக்கேத்தும் பல்லழகி…
முந்திரிக்கா காச்சதுபோல…
முழுசானா முன்னழகி…

ஆண் : கத்தரிக்காய் காம்புபோல…
கதகேட்கும் காதழகி…
முத்தசோறு ஆக்கிதரட்டா…
வேற முக்குத்தி நான் வாங்கிதறட்டா…

பெண் : பாசங்கு பன்னாதடா…
பல்லு பூறா கொட்டி பூடும்…
கையகிய வெக்காதடா…
கட்டுசோறு கெட்டு பூடும்…

பெண் : அண்ணகிட்ட சொல்லிபுட்டா…
ஓன் வால வெட்டிபுடும்…
எங்க அப்பன் கோவகாரன்டா…
ஒன்ன உண்டு இல்லன்னு ஆக்கபோரான்டா…

ஆண் : வில்லுவண்டி நூறுகட்டி…
ஒனக்கு வேண்டிய சீர் ஏத்தி வாறேன்…

பெண் : காஞ்சி பட்டு கூரகட்டி…
ஓன் கைய கோத்து நானும் வாறேன்…

ஆண் : அடி வேணாம் புள்ள கோவமெல்லாம்…
கட்டி புடிடி அள்ளி என்ன நெட்டிமுறிடி…

பெண் : நான் சேத்து வச்ச ஆசையெல்லாம்…
உனக்கு தாறேன்…
ஓங்கூட தொனைக்கி வாறேன்…

ஆண் : ஆரவள்ளி சூரவள்ளி…
ஆட்டிபடைக்கும் அம்ச வள்ளி…
என்ன தொவச்சி எடுக்க வந்த கள்ளி…

பெண் : கொறலிவித்த பேச்சிக்காரா…
கொரங்கு சேட்ட கண்ணுக்காரா…
ஏ… கொடுக்கா பல்லு மூக்குக்காரா…

ஆண் : ஒன்ன கண்டா துடிக்கிறேன்டி…
தெனமும் கவுந்து நான் படுக்குறேன்டி…

பெண் : என்ன சப்புகொட்டி சொக்காதடா…
என்ன தாலிகட்டி தூக்கிகோடா…

—BGM—


Notes : Aaravalli Song Lyrics in Tamil. This Song from Avargalum Ivargalum (2011). Song Lyrics penned by Ilaya Kamban. ஆரவள்ளி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading