பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | கே.ஜே. யேசுதாஸ் | இளையராஜா | மூடு பனி |
Yen Iniya Pon Nilavae Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : என் இனிய பொன் நிலாவே…
பொன்நிலவில் என் கனாவே…
நினைவிலே புது சுகம்… த ர ர ரா த தா…
தொடருதே தினம் தினம்… த ர ர ரா த தா…
ஆண் : என் இனிய பொன் நிலாவே…
பொன்நிலவில் என் கனாவே…
—BGM—
ஆண் : பன்னீரைத் தூவும் மழை…
ஜில்லென்ற காற்றின் அலை…
சேர்ந்தாடும் இந்நேரமே…
குழு (பெண்கள்) : லா லால லா…
ஆண் : என் நெஞ்சில் என்னென்னவோ…
எண்ணங்கள் ஆடும் நிலை…
என் ஆசை உன்னோரமே…
குழு (பெண்கள்) : லா லால லா…
ஆண் : வெண்நீல வானில் அதில் என்னென்ன மேகம்…
ஊர்கோலம் போகும் அதன் உள்ளாடும் தாகம்…
புரியாதோ என் எண்ணமே அன்பே…
ஆண் : என் இனிய பொன் நிலாவே…
பொன்நிலவில் என் கனாவே…
நினைவிலே புது சுகம்… த ர ர ரா த தா…
தொடருதே தினம் தினம்… த ர ர ரா த தா…
ஆண் : என் இனிய பொன் நிலாவே…
பொன்நிலவில் என் கனாவே…
—BGM—
ஆண் : பொன்மாலை நேரங்களே…
என் இன்ப ராகங்களே…
பூவான கோலங்களே…
குழு (பெண்கள்) : லா லால லா…
ஆண் : தென் காற்றின் இன்பங்களே…
தேனாடும் ரோஜாக்களே…
என்னென்ன ஜாலங்களே…
குழு (பெண்கள்) : லா லால லா…
ஆண் : கண்ணோடு தோன்றும்…
சிறு கண்ணீரில் ஆடும்…
கைசேரும் காலம் அதை என் நெஞ்சம் தேடும்…
இது தானே என் ஆசைகள் அன்பே…
ஆண் : என் இனிய பொன் நிலாவே…
பொன்நிலவில் என் கனாவே…
நினைவிலே புது சுகம்… த ர ர ரா த தா…
தொடருதே தினம் தினம்… த ர ர ரா த தா…
ஆண் : என் இனிய பொன் நிலாவே…
பொன்நிலவில் என் கனாவே…
Notes : Yen Iniya Pon Nilavae Song Lyrics in Tamil. This Song from Moodu Pani (1980). Song Lyrics penned by Gangai Amaran. என் இனிய பொன் நிலாவே பாடல் வரிகள்.