வா வா பெண்ணே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விஜய் குமார் & நாகராஜிசித் ஸ்ரீராம் & பிரியங்காகோவிந்த் வசந்தாஉறியடி 2

Vaa Vaa Penne Song Lyrics in Tamil


BGM

ஆண் : வா வா பெண்ணே…
என் பாடலின் இசையே நீ…
வா வா புது ராகம் செய்வோம்…

ஆண் : வா வா கண்ணே…
என் தேடலின் திசையே நீ…
வா வா புது பயணம் செல்வோம்…

ஆண் : என் இசை நீயே உன் கவிதை நானே…
இருவரும் இணைந்தே புது பாடல் செய்வோம்…
என் இசை நீயே உன் கவிதை நானே…
முடிவில்லா முதற்காதல் செய்வோம் வருவாய் நீயே…

ஆண் : வா வா பெண்ணே…
என் பாடலின் இசையே நீ…
வா வா புது ராகம் செய்வோம்…

ஆண் : வா வா கண்ணே…
என் தேடலின் திசையே நீ…
வா வா புது பயணம் செல்வோம்…

BGM

பெண் : நாணம் மாறும்…
மனமோ தடுமாறும்…
மௌனம் தீரும் இன்பம் சேரும்…

பெண் : மீண்டும் மீண்டும் பார்த்திடவே தோன்றும்…
தோன்றும் வார்த்தை தொலைந்தே போகும்…

BGM

ஆண் : நேற்றிரவு நான் விழித்திருந்தேன்…
காரணம் நீ கண்ணே காரணம் நீ…
அதிகாலையில் நான் விழித்து கொண்டேன்…
காரணம் நீ அன்பே காரணம் நீ…

ஆண் : நிழலாய் நானே…
உடன் வருவேனே…
தனிமை தொலையும்…
புது இனிமை இனி உருவாகும்…

ஆண் : புவியிசை தோற்கும்…
ஆசை பிறக்கும்…
நம்மிசை சேர்க்கும்…
என் திசைகளும் அதை ஏற்கும்…

பெண் : காணும் யாவும் புதிதாய் தெரியும்…
வானில் பறக்க சிறகுகள் விரியும்…
ஏனோ ஏனோ மனத்திரை மறையும்…
இதுவே காதல் என்றே புரியும்…

ஆண் & பெண் : வா வா பெண்ணே…
என் பாடலின் இசையே நீ…
வா வா புது ராகம் செய்வோம்…

ஆண் & பெண் : வா வா கண்ணே…
என் தேடலின் திசையே நீ…
வா வா புது பயணம் செல்வோம்…

பெண் : வா வா அன்பே…
வழித்துணை நானே…
நீயும் நானும் ஓர் உயிர்தானே…

பெண் : வா வா அன்பே…
உன் துணை நானே…
நீ என் வாழ்வின் புது வரம்தானே…

BGM


Notes : Vaa Vaa Penne Song Lyrics in Tamil. This Song from Uriyadi 2 (2019). Song Lyrics penned by Vijay Kumar & Nagaraji. வா வா பெண்ணே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top