udhaya-udhaya-song-lyrics
பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிஹரிஹரன் & சாதனா சர்கம்ஏ.ஆர்.ரகுமான்உதயா

Udhaya Udhaya Song Lyrics in Tamil


பெண் : உதயா உதயா உளறுகிறேன்…
உயிரால் உனையே எழுதுகிறேன்…
காதல்…

BGM

பெண் : காதல் தீண்டவே…
காதல் தீண்டவே…
கடல் தாகம் தீர்ந்ததே…
உன்னாலே தன்னாலே…

பெண் : உதயா உதயா உளறுகிறேன்…
உயிரால் உனையே எழுதுகிறேன்…
காதல்… காதல்… காதல்…

ஆண் : உன் பாதி வாழ்கிறேன்…
என் பாதி தேய்கிறேன்…
உன்னாலே தன்னாலே…

பெண் : என்னாளும்…
உதயா உதயா உளறுகிறேன்…
உயிரால் உனையே எழுதுகிறேன்…
காதல்…

ஆண் : காதல்… காதல்…

BGM

பெண் : என்னை தொலைத்துவிட்டேன்…
என் உன்னை அடைந்துவிட்டேன்…

ஆண் : உன்னை அடைந்ததனால்…
என் என்னை தொலைத்துவிட்டேன்…

பெண் : ஏனோ ஏனேனோ தொலைந்தேன் மீண்டேனோ…
ஏனோ ஏனேனோ மீண்டும் தொலைவேனோ…

ஆண் : ஆயுள் ஆனவளே…
கூந்தல் இருட்டில் என் கிழக்கு தொலைந்தும்…
காதல்… தீண்டவே…

BGM

ஆண் : மூச்சின் குமிழ்களிலே…
உயிர் ஊற்றி அனுப்பிவைத்தேன்…

பெண் : கூச்சம் வருகையிலே…
உடல் மாற்றி நுழைந்துவிட்டேன்…

ஆண் : ஏனோ ஏனேனோ ஏதோ ஆனேனோ…
ஏனோ ஏனேனோ நீயாய் ஆனேனோ…

பெண் : தாயும் ஆனவனே…
என் நெற்றி பாதையில் ஊற்றை திறந்து…
காதல்…

ஆண் : காதல் தீண்டவே…
காதல் தீண்டவே…
கடல் தாகம் தீர்ந்ததே…
உன்னாலே தன்னாலே…
உன்னாலே தன்னாலே…

ஆண் : உயிரே உயிரே உளறுகிறேன்…
உளறியும் கவிதைகள் எழுதுகிறேன்…

பெண் : உதயா உதயா உளறுகிறேன்…
உயிரால் உனையே எழுதுகிறேன்…
காதல்… காதல்…


Notes : Udhaya Udhaya Song Lyrics in Tamil. This Song from Udhaya (2004). Song Lyrics penned by Arivumathi. உதயா உதயா பாடல் வரிகள்.