தண்டோரா கண்ணால

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிவி.வி. பிரசன்னாடி. இமான்கடைக்குட்டி சிங்கம்

Thandora Kannaala Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தண்டோரா கண்ணால நித்தமும் படிச்ச ஆராரோ…
முண்டாசா என் வாழ்வ கட்டிட வரும் நீ பூந்தேரோ…

ஆண் : எத்தனை மொற நான் பாத்தாலும்…
பத்தல என பேசும் வாயி…
சக்கரை மழை போல் உன் பேச்சு…
கொட்டிட தொலைவாச்சே பாயி…
உள்ளந்துடிக்குதே உள்ளத வந்து ஆராயி…

ஆண் : தண்டோரா கண்ணால நித்தமும் படிச்ச ஆராரோ…
முண்டாசா என் வாழ்வ கட்டிட வரும் நீ பூந்தேரோ… ஓ…

—BGM—

ஆண் : பொட்டு வச்ச பொண்ணு…
சுத்தி அடிக்குது கொட்ட முத்து கண்ணு…
வட்டம் கட்டி நின்னு…
கும்மி அடிக்குது சொல்லு ரெண்டில் ஒன்னு…

ஆண் : கிழக்காலதானே வரும் சூரியன்…
என நானும் கூட நினைச்சேன்…
எகத்தாளம் பேசும் மகராசி உன் முகம்…
பார்க்க தூங்கி முழிச்சேன்…

ஆண் : என்னவோ போடி உன்னையே தாடி…
ரெக்க முளைக்குதடி…
நெஞ்சு பறக்குதடி…

ஆண் : தண்டோரா கண்ணால நித்தமும் படிச்ச ஆராரோ…
முண்டாசா என் வாழ்வ கட்டிட வரும் நீ பூந்தேரோ…

—BGM—

ஆண் : செங்க கல்லும் உன்ன கண்ட நொடியில…
தங்க கல்லா மின்ன…
ரொட்டி துண்டா என்ன கன்ன குழியில…
மென்னு நல்ல தின்ன…

ஆண் : புலி மேல பாய துணிஞ்சாலுமே…
மெரளாத ஆள கவுத்த…
சிரிப்பால ஏன்டி மயில் தோகைய…
ஒயர் கொடையாட்டம் இழுத்த…

ஆண் : வள்ளலா வாடி அள்ளியே போடி…
வண்டி நொடிக்குதடி…
நொண்டி அடிக்குதடி…

ஆண் : தண்டோரா கண்ணால நித்தமும் படிச்ச ஆராரோ…
முண்டாசா என் வாழ்வ கட்டிட வரும் நீ பூந்தேரோ…

ஆண் : எத்தனை மொற நான் பாத்தாலும்…
பத்தல என பேசும் வாயி…
சக்கரை மழை போல் உன் பேச்சு…
கொட்டிட தொலைவாச்சே பாயி…
உள்ளந்துடிக்குதே உள்ளத வந்து ஆராயி…

ஆண் : தண்டோரா…


Notes : Thandora Kannaala Song Lyrics in Tamil. This Song from Kadaikutty Singam (2018). Song Lyrics penned by Yugabharathi. தண்டோரா கண்ணால பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading