மல்லிக மொட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஅருண்மொழி & சுவர்ணலதாஇளையராஜாசக்திவேல்

Malliga Mottu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே…
வளையல் மெட்டு வயச தொட்டு வளைக்குதடி மீனே…
மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே…
வளையல் மெட்டு வயச தொட்டு வளைக்குதடி மீனே…

ஆண் : மந்தாரச்செடி ஓரத்திலே…
மாமன் நடத்துற பாடத்துலே…
மானே மருதாணி பூசவா… ஹோ ஓ…
தேனே அடையாளம் போடவா…

பெண் : மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதையா மானே…
வளையல் மெட்டு வயசை தொட்டு வளைக்குதையா மீனே…

—BGM—

பெண் : மூடி வச்சு மூடி வச்சு மறைச்சு வச்சதெல்லாம்…
காத்தடிச்சு காத்தடிச்சு கலைஞ்சு போனதென்ன…

ஆண் : பாடி வச்சு பாடி வச்சு பதுக்கி வச்சதெல்லாம்…
காதலிக்க காதலிக்க வெளஞ்சு வந்ததென்ன…

பெண் : உன்னாலதான் உன்னாலதான் உதிர்ந்து போச்சு வெக்கம்…
ஆண் : கண்ணாலதான் கையாலதான் கலந்து கிட்டா சொர்கம்…

பெண் : நானிருந்தேன் சாமி வாசலிலே…
மாட்டிகிட்டேன் இப்போ வம்பினிலே…
நானே மருதாணி பூசவா… ஹோ ஓ…
நீயே அடையாளம் போடவா…

ஆண் : மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே…
வளையல் மெட்டு வயச தொட்டு வளைக்குதடி மீனே…

பெண் : மந்தாரச்செடி ஓரத்திலே…
மாமன் நடத்துற பாடத்துலே…
மானே மருதாணி பூசவா… ஹோ ஓ…
நீயே அடையாளம் போடவா…

—BGM—

ஆண் : பூவரசம் பூவுக்குள்ள இருப்பதென்ன சொல்லு…
பூ பறிக்கும் மாப்பிள்ளைக்கு பசிக்குதம்மா நில்லு…

பெண் : பூவெடுத்து தேனெடுத்து எதுக்கு இங்கே வரணும்…
பரிதவிச்சு பசிச்சு நின்னா பந்தியும்போட்டு தரணும்…

ஆண் : ஆடியாடி பாடி வந்து அலையுதொரு குருவி…
பெண் : கீச்சு கீச்சு பேசுதையா மனச கொஞ்சம் துருவி…

ஆண் : பிஞ்சு பிஞ்சு விரல் கொஞ்சுதடி…
கொஞ்சி கொஞ்சி வந்து கெஞ்சுதடி…
மானே மருதாணி பூசவா… ஹோ ஓ…
தேனே அடையாளம் போடவா…

பெண் : மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதையா மானே…
வளையல் மெட்டு வயசை தொட்டு வளைக்குதையா மீனே…

ஆண் : மந்தாரச்செடி ஓரத்திலே…
மாமன் நடத்துற பாடத்துலே…

பெண் : நானே மருதாணி பூசவா… ஹோ ஓ…
நீயே அடையாளம் போடவா…

ஆண் : மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே…
பெண் : வளையல் மெட்டு வயசை தொட்டு வளைக்குதையா மீனே…


Notes : Malliga Mottu Song Lyrics in Tamil. This Song from Sakthivel (1994). Song Lyrics penned by Vaali. மல்லிக மொட்டு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading