| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| யுகபாரதி | ஸ்ரேயா கோஷல் | டி. இமான் | மலை |
Kannasara Aaraaro Song Lyrics in Tamil
—BGM—
பெண் : கண்ணசர ஆராரோ சொல்லும் இளங்காத்தே…
கை உரசி போகாதோ புங்க மர கீத்தே…
பெண் : அந்தரத்தில் வட்டமிடும் ஒற்றை இறகாய்…
அங்கும் இங்கும் நானாட…
இன்னொருவர் துன்பம் அதை நெஞ்சம் உணர…
என் மனதும் போராட…
மாறாதோ யாவும் இங்கே அன்பின் விசை கூட…
பெண் : கண்ணசர ஆராரோ சொல்லும் இளங்காத்தே…
கை உரசி போகாதோ புங்க மர கீத்தே…
—BGM—
பெண் : கீழ யார் மேலே யார் என்று கருதாமல்…
உதவும் மனமே உலகை வெல்லுமே… ஏஏ…
நீ வேறோ நான் வேறோ கைகள் இணைந்தாலே…
மதமே மறைய மனிதம் எஞ்சுமே… ஏஏ…
பெண் : பறவைகளின் கூட்டில் தங்கி நான் வாழ…
பல பிறவி தேவை எனக்கேட்பேனே…
கதவுகளை மூடி கொண்டு வாழாத…
பழங்குடியின் பாதம் தனை சேர்வேனே…
பெண் : வரம்பே இல்லாத ஏழை பாசம்…
உணர்ந்தால் முள் மீதும் வீசும் வாசம்…
சிந்தும் துளி கண்ணீரும் பேசும்…
பெண் : கண்ணசர ஆராரோ சொல்லும் இளங்காத்தே…
குழு : சொல்லும் இளங்காத்தே…
பெண் : கை உரசி போகாதோ புங்க மர கீத்தே…
குழு : புங்க மர கீத்தே…
பெண் : அந்தரத்தில் வட்டமிடும் ஒற்றை இறகாய்…
அங்கும் இங்கும் நானாட…
குழு : அங்கும் இங்கும் நானாட…
பெண் : இன்னொருவர் துன்பம் அதை நெஞ்சம் உணர…
என் மனதும் போராட…
குழு : என் மனதும் போராட…
குழு : மாறாதோ யாவும் இங்கே அன்பின் விசை கூட…
—BGM—
Notes : Kannasara Aaraaro Song Lyrics in Tamil. This Song from Malai (2024). Song Lyrics penned by Yugabharathi. கண்ணசர ஆராரோ பாடல் வரிகள்.
