இந்த ஊரில் எப்பவுமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஷங்கர் மகாதேவன்யுவன் ஷங்கர் ராஜாவேல்

Indha Ooril Eppavume Song Lyrics in Tamil


பெண் : பழநிமல உச்சியில…
பாரத்தெல்லாம் எறக்கிவச்சு…
சொக்கம்பட்டி காட்டுக்குள்ள…
கரும்புவெட்டும் காளைகளா…
கட்டெறும்பு காயப்படாம…
கணுக்கணுவா பாத்து வெட்டு…

ஆண் : இந்த ஊரில் எப்பவுமே…
கெட்டதே நடக்காதுடா…
இங்க எறும்பு கூட…
யாரையுமே கடிக்காதுடா…

BGM

ஆண் : இந்த ஊரில் எப்பவுமே…
கெட்டதே நடக்காதுடா…
குழு: நடக்காதுடா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : இங்க எறும்பு கூட யாரையுமே…
கடிக்காதுடா…
குழு : கடிக்காதுடா…

ஆண் : ஹேய்… வெட்டுறவன் வெட்டினா…
தித்திக்கும்டா கரும்பு…
குத்துறவன் குத்தினா…
ரத்தம் கொட்டும் உடம்பு…

ஆண் : வெட்ட வெட்ட வாழையாவோம்…
கொட்ட கொட்ட தேனீ ஆவோம்…
கஷ்டமுனு வந்தா கவலப்பட மாட்டோம்…
நஷ்டமுனு வந்தா நடையக்கட்ட மாட்டோம்…

குழு : வெற்றி வேலு முருகன்…
வெற்றியத்தான் கொடுப்பான்…
வீரவேலு முருகன்…
எங்க வீரத்தில இருப்பான்…

ஆண் : இந்த ஊரில் எப்பவுமே…
கெட்டதே நடக்காதுடா…
குழு : நடக்காதுடா…

BGM

ஆண் : பச்சரிசி பொங்கவச்சு பூச நடத்தணும்…
குழு : நல்ல நாளு இந்த நாளு…
ஆண் : கட்டுக்கட்டா கரும்பெடுத்து…
கடிச்சு நொறுக்கணும்…
குழு : நல்லா சொன்ன வேலு வேலு…

ஆண் : மருதமல முருகனுக்கு…
அலகு குத்தி வந்தோம்…
மதுரைவீரன் சாமிக்குத்தான்…
அருவா அடிச்சு தந்தோம்…

ஆண் : மாரியம்மன் காவலால…
நல்லா இருக்கு ஊரு…
அண்ணன் தம்பி போலதானே…
ஒண்ணா இருக்கோம் பாரு…

ஆண் : நல்ல எண்ணங்கள வெதையா வெதச்சாக்கா…
மேகம் இல்லாம மழை அடிக்கும்…

குழு : சிலம்பெடுத்துப் போனா…
சூரியனைத்தொடுவான்…
சிறகடிச்சுப்போனா சந்திரன புடிப்பான்…

ஆண் : கஷ்டமுனு வந்தா கவலப்பட மாட்டோம்…
நஷ்டமுனு வந்தா நடையக்கட்ட மாட்டோம்…

ஆண் : வெற்றி வேலு முருகன்…
வெற்றியத்தான் கொடுப்பான்…
வீரவேலு முருகன்…
எங்க வீரத்தில இருப்பான்…

BGM

ஆண் : வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு…
பழையபேச்சுடா…
குழு : ஆமா ஆமா வேலு வேலு…

ஆண் : ஏ… குண்டு ஒண்ணு போட்டாக்கா…
துண்டு நூறு அடா…
குழு : போட்டான் பாரு ஒரே போடு…

ஆண் : அரசமரத்து புள்ளையாரு…
சுண்டலத்தான் கேக்கும்…
எங்க ஊரு புள்ளை எல்லாம்…
சண்டையத்தான் கேக்கும்…

ஆண் : ஆறறிவு எல்லாருக்கும்…
பொதுவாக இருக்கும்…
ஆறாவது விரலு மட்டும்…
சிலருக்குத்தான் இருக்கும்…

ஆண் : சூரக்காத்திலையும் சூடம் ஏத்திடுவோம்…
எதிரி எவனும் இங்கவர மாட்டான்…

குழு : வேலுக்கம்பு அருவா ஆயுதங்க எதுக்கு…
வேலு கூட இருந்தா வெற்றிதானே நமக்கு…

ஆண் : இந்த ஊரில் எப்பவுமே…
கெட்டதே நடக்காதுடா…
குழு: நடக்காதுடா…

ஆண் : இங்க எறும்பு கூட யாரையுமே…
கடிக்காதுடா…
குழு : கடிக்காதுடா…

ஆண் : ஹேய் வெட்டுறவன் வெட்டினா…
தித்திக்கும்டா கரும்பு…
குத்துறவன் குத்தினா…
ரத்தம் கொட்டும் உடம்பு…

ஆண் : வெட்ட வெட்ட வாழையாவோம்…
கொட்ட கொட்ட தேனீ ஆவோம்…
கஷ்டமுனு வந்தா கவலப்பட மாட்டோம்…
நஷ்டமுனு வந்தா நடையக்கட்ட மாட்டோம்…

குழு : வெற்றி வேலு முருகன்…
வெற்றியத்தான் கொடுப்பான்…
வீரவேலு முருகன்…
எங்க வீரத்தில இருப்பான்…


Notes : Indha Ooril Eppavume Song Lyrics in Tamil. This Song from Vel (2007). Song Lyrics penned by Na. Muthukumar. இந்த ஊரில் எப்பவுமே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading