ஆவாரம் பூவு ஒண்ணு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்கே.ஜே. யேசுதாஸ் & கே.எஸ். சித்ராதேவாநம்ம ஊரு பூவாத்தா

Aavaram Poovu Onu Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஆவாரம் பூவு ஒண்ணு…
நாரோடு வாடுதுன்னு…
காதோரம் வந்ததா சேதி…
இன்று நீகூட அதில் ஒரு பாதி…

பெண் : ஆவாரம் பூவு ஒண்ணு…
நாரோடு வாடுதுன்னு…
காதோரம் வந்ததா சேதி…
இன்று நீகூட அதில் ஒரு பாதி…

பெண் : தேனோடு மலர்ந்த பூவொன்னு மணக்க…
நாளொன்னு பொறக்கலையே என் மயிலே…

ஆண் : ஆவாரம் பூவு ஒண்ணு…
நாரோடு வாடுதுன்னு…
காதோரம் வந்தறொரு சேதி…
அடி நானிங்கு அதில் ஒரு பாதி…

—BGM—

பெண் : கட்டிவச்ச மாலையுடன் கையேந்தி நிக்கிறேன்…
கண்ணுக்குள்ள தீயவச்சு கண்ணீரில் தைக்கிறேன்…

—BGM—

பெண் : கட்டிவச்ச மாலையுடன் கையேந்தி நிக்கிறேன்…
கண்ணுக்குள்ள தீயவச்சு கண்ணீரில் தைக்கிறேன்…

பெண் : நம்பி இருக்குதொரு எளம் மனசு…
தெனம் வெம்பி வெடிக்குதே என் மனசு…

பெண் : நம்பி இருக்குதொரு எளம் மனசு…
தெனம் வெம்பி வெடிக்குதே என்மனசு…
ஒரு காவல் போட்டு காலமும் நடிக்குது…

ஆண் : ஆவாரம் பூவு ஒண்ணு…
நாரோடு வாடுதுன்னு…
காதோரம் வந்தறொரு சேதி…
அடி நானிங்கு அதில் ஒரு பாதி…

—BGM—

ஆண் : முக்கடலும் முக்குழிச்சு கண்டெடுத்த ஆணிமுத்தே…
மூச்சுக்குளே நான் தெனமும் கட்டிவச்ச காதல் முத்தே…

—BGM—

ஆண் : முக்கடலும் முக்குழிச்சு கண்டெடுத்த ஆணிமுத்தே…
மூச்சுக்குளே நான் தெனமும் கட்டிவச்ச காதல் முத்தே…

ஆண் : நட்ட நடுத்தெருவில் விடுவேனா…
அடி கண்ணே உனை ஒருவன் தொடுவானா…
நட்ட நடுத்தெருவில் விடுவேனா…
அடி கண்ணே உனை ஒருவன் தொடுவானா…
இந்த ஊருக்கு பயந்து உனை பிரிவேனா…

பெண் : ஆவாரம் பூவு ஒண்ணு…
நாரோடு வாடுதுன்னு…
காதோரம் வந்ததா சேதி…
இன்று நீகூட அதில் ஒரு பாதி…

பெண் : தேனோடு மலர்ந்த பூவொன்னு மணக்க…
நாளொன்னு பொறக்கலையே என் மயிலே…

ஆண் : ஆவாரம் பூவு ஒண்ணு…
நாரோடு வாடுதுன்னு…
காதோரம் வந்தறொரு சேதி…
அடி நானிங்கு அதில் ஒரு பாதி…


Notes : Aavaram Poovu Onu Song Lyrics in Tamil. This Song from Namma Ooru Poovatha (1990). Song Lyrics penned by Kalidasan. ஆவாரம் பூவு ஒண்ணு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading