தோழி
யாரோடும் காணாத தூய்மையை…
உன்னில் நான் காண்கிறேன்…
முன் என்றும் இல்லாத ஆசைகள்…
உன்னாலே நான் கொள்கிறேன்…
சொல்லடி தோழி தோழி…
என்னருந்தோழி சொல்லடி…
யாரோடும் காணாத தூய்மையை…
உன்னில் நான் காண்கிறேன்…
முன் என்றும் இல்லாத ஆசைகள்…
உன்னாலே நான் கொள்கிறேன்…
சொல்லடி தோழி தோழி…
என்னருந்தோழி சொல்லடி…
ரயிலின் ஒலிகள் உனையே தேடுதே…
அதிரும் பறையாய் இதயம் ஆடுதே…
உந்தன் கை வீசிடும்…
பொய் ஜாடை என்னை…
ஏதென் தோட்டத்தில் வீசுதே…
தீரா வானம் நாமே…
தீரும் வாழ்வை தீராமல் வாழ…
தீரா வானம் நாமே…
வெகு தூரம் போனாலும் ஓயாமல் வாழ…
நகர கூச்சலை மீறி…
அசலின் வாசலை தேடி…
தவித்தேனே தவித்தேனே தனியே…
மின் மின் மின் மின் மினியே…
வா வா பெண்ணே…
என் பாடலின் இசையே நீ…
வா வா புது ராகம் செய்வோம்…
வா வா கண்ணே…
என் தேடலின் திசையே நீ…
வா வா புது பயணம் செல்வோம்…
மீனுக்கு நீந்த கற்று தரும் நீர்…
இறகிற்கு பறக்க கற்று தரும் காற்று…
மனிதர்க்கு வாழ கற்று தரும் வலி…
அணங்கே மாதே யாத்ரி யாத்ரி…
மேகம் முட்டி மின்னல் வெட்டி…
வானம் கொட்டி மெட்டு கட்ட…
கூட்டை விட்டு பட்சி ரெண்டு…
வின் முட்டி கை தட்ட…
யாரோடும் காணாத தூய்மையை…
உன்னில் நான் காண்கிறேன்…
முன் என்றும் இல்லாத ஆசைகள்…
உன்னாலே நான் கொள்கிறேன்…