ஹே பெண்ணே
ஹே பெண்ணே பெண்ணே…
உன்னை கண்ட பின்னே நேரம்…
நல்ல நேரம் என்று தோன்றுதே…
மின்னும் பொன்னே கண்ணுக்குள்ளே…
உந்தன் பிம்பம் எங்கோ என்னை கொண்டு போகுதே…
ஹே பெண்ணே பெண்ணே…
உன்னை கண்ட பின்னே நேரம்…
நல்ல நேரம் என்று தோன்றுதே…
மின்னும் பொன்னே கண்ணுக்குள்ளே…
உந்தன் பிம்பம் எங்கோ என்னை கொண்டு போகுதே…
ரயிலின் ஒலிகள் உனையே தேடுதே…
அதிரும் பறையாய் இதயம் ஆடுதே…
உந்தன் கை வீசிடும்…
பொய் ஜாடை என்னை…
ஏதென் தோட்டத்தில் வீசுதே…
மரகத மாலை நேரம்…
மமதைகள் மாய்ந்து வீழும்…
மகரந்த சேர்க்கை காதல்தானா…
இரவினில் தோற்ற தீயை…
பருகிட பார்க்கும் பார்வை…
வழிவது காதல் தீர்த்தம்தானா…
இரவிங்கு தீவாய் நம்மை சூழுதே…
விடியலும் இருளாய் வருதே…
நினைவுகள் தீயாய் அலை மோதுதே…
உடலிங்கு சாவாய் அழுதே…
என்னை ஆளும் பெண்ணிலாவே…
உனது வானம் நானே…
உன்னைத் தாண்டி எந்தன் வாழ்வு…
ஒன்றும் இல்லை வா வா…
வானில் இருள் சூழும்போது…
மின்னும் மின்னல் துணையே…
நானும் நீயும் சேரும்போது…
விடையாகிடுமே வாழ்வே…
ஏனோ இரவோடு ஒளியாய் கூடும்…
உறவொன்று கேட்கிறேன்…
வரைமீறும் இவளின் ஆசை நிறைவேற பார்க்கிறேன்…
நதி சேரும் கடலின் மீது மழை நீராய் சேருவேன்…
நான் நீ நாம்…
வாழவே உறவே…
நீ நான் நாம்…
தோன்றினோம் உயிரே…
தாபப் பூவும் நான்தானே… ஏ…
பூவின் தாகம் நீதானே… ஏ…
கலைகிறதே கனவே…
விடியாதோ இரவே…
வாழ்வே இனிமேல்…
வழி ஆகாதா…
மறைத்திடலாம் சாட்சி…
மறைந்திடுமோ காட்சி…
உண்மை ஒரு நாள் அரங்கேறாதா…